Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த ஆஸி.. சென்னையில் சாதிக்குமா ரோதித் படை

சென்னை : இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 270 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றுள்ளது.

இந்த நிலையில் தொடரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசியது.

இந்த போட்டியில் இந்திய அணி எந்த மாற்றத்தையும் செய்யாத நிலையில், ஆஸ்திரேலிய அணி வார்னர் மற்றும் ஏகார் ஆகியோரை தேர்வு செய்தது.

அபார தொடக்கம்

அபார தொடக்கம்

தொடக்கம் முதலே டிராவிஸ் ட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதன் காரணமாக ரோகித் சர்மா உடனடியாக சுழற்பந்துவீச்சாளர்களை பந்துவீச அழத்தார். அப்போதும் ரன்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், இந்தியாவுக்கு எங்கிருந்து தான் விக்கெட் கிடைக்கப்போகிற என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஹர்திக் அசத்தல்

ஹர்திக் அசத்தல்

அப்போது ஹர்திக் பாண்டியா கையில் பந்து சென்றதும், ஆட்டத்தின் போக்கில் மாற்றம் தெரிந்தது. ஹர்திக் பாண்டியா வேகத்தையும் கூட்டி பந்துவீசினார். இடையில் லைன் மற்றும் லெங்தில் மாற்றம் செய்தார். இதன் காரணமாக தெர்ட் மேன் திசையில் அடித்த டிராவிஸ் ஹெட் கேட்ச் ஆகி 31 பந்தில் 33 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கேப்டன் ஸ்மித் டக் அவுட்டாக ஆஸ்திரேலிய அணியின் ரன்கள் அடிக்கும் வேகம் குறைந்தது.

குல்தீப் கலக்கல்

குல்தீப் கலக்கல்

கடந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய மிட்செல் மார்ஷ் 47 ரன்கள் எடுத்த நிலையில், ஹர்திக் பந்தை அடிக்க முயன்ற போது இன்சைட் எட்ஜாகி போல்ட ஆனார். இதன் மூலம் 85 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய அணி இழந்தது. இதனையடுத்து டேவிட் வார்னர் மற்றும் மார்னஸ் லாபஸ்சேன் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து நெருக்கடி கொடுக்க தொடங்கினர்.

270 ரன்கள் இலக்கு

270 ரன்கள் இலக்கு

ஆனால் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து தடுமாறிய ஆஸ்திரேலிய அணியை ஸ்டோனிஸ் மற்றும் அலெக்ஸ் கெரி சரிவிலிருந்து மீட்ட நிலையில், இருவரும் முக்கிய கட்டத்தில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் சென் அப்பார்ட் அதிரடியாக விளையாட, ஆஸ்திரேலிய அணி 49 ஓவர் முடிவில் 269 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குல்தீப், ஹர்திக் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்கள்.

Story first published: Wednesday, March 22, 2023, 18:04 [IST]
Other articles published on Mar 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+