பாகிஸ்தான் பவுலிங்கை கதறவிட்ட ஆஸ்திரேலியா..386 ரன்கள் குவிப்பு..ஃபில்டிங்கில் கோட்டை விட்ட பாபர் படை
பெங்களூரு : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 368 ரன்ளை இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயத்துள்ளது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 18 வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலியாவை 300 ரன்களுக்குள் சுருட்டி விடலாம் என நினைத்த பாகிஸ்தான அணி இந்த முடிவு எடுத்தது. ஆனால் பாகிஸ்தான் அணியின் பில்டிங் குறித்து தெரிந்தும் பாபர் அசாம் இந்த முடிவு எடுத்ததுதான் மிகவும் நகைப்புக்குரியது.
அண்டர்டேக்கருக்கு ஏழு உயிர் இருக்கிறது என சிறுவயது பசங்க நம்புவார்கள். அதை போல் ஆஸ்திரேலியா வீரர்களுக்கு பல உயிர்களை கேட்ச்களை தவறவிட்டதன் மூலம் பாகிஸ்தான் கொடுத்தது. குறிப்பாக டேவிட் வார்னர் 10 ரன்களில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை பாகிஸ்தான் வீரர் ஒசாமா மிர் தவறவிட்டார். இதனை அடுத்து அவர் 163 ரன்கள் குவித்தார்.
இதில் ஒன்பது சிக்ஸர்களும் 14 பவுண்டரிகளும் அடங்கும். இதேபோன்று மற்றொரு தொடக்க வீரரான மிச்சம் மார்ஸ் 108 பந்துகளில் 121 ரன்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டர்களும் ஒன்பது சிக்ஸர்களும் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 259 ரன்களை சேர்த்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 400 ரன்களை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷாகின் அப்ரிடி ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித் 7 ரன்களிலும் ஸ்டோனிஸ் 21 ரன்களும், ஜாஸ் இங்கிலீஷ் 13 ரன்களிலும் மார்னஸ் லாபஷன் 8 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் ஆஸ்திரேலிய அணியின் ரன் குவிக்கும் வேகம் குறைந்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஜோடியை மட்டும் பாகிஸ்தான் அணி விரைவாக வீழ்த்திருந்தால் இந்நேரம் போட்டி பாகிஸ்தான் கையில் இருந்திருக்கும்.

ஆனால் தற்போது ஆஸ்திரேலிய அணி முதல் 20 ஓவர் இல்லை ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டது. எனினும் கடைசி 15 ஓவர்களில் பாகிஸ்தான் வீரர் ஷாகின் அப்ரிடி அபாரமாக பந்து வீசி 10 ஓவரில் 54 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 367 ரன்களை எடுத்தது.


Click it and Unblock the Notifications