Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"வாங்க தம்பிகளா, வாங்க".. இந்திய அணியை புரட்டியெடுக்க காத்திருக்கும் "வில்லன்".. மிரட்டும் வாட்!

பெர்த்: இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக எங்களது அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 2 வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பார்கள் என்று ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் வாட் கூறியுள்ளார்.

உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு இந்திய அணி மீண்டும் ஆஸ்திரேலியா வந்துள்ளது. இங்கு 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டுவென்டி 20 போட்டிகளில் இரு அணிகளும் மோதவுள்ளன.

இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணி ஆஸ்திரேலியா வந்து விட்டது. அதேபோல ஆஸ்திரேலியாவும் 3 போட்டிகளுக்கான தனது அணியை ஏற்கனவே அறிவித்து விட்டது.

ஜனவரி 12 முதல்

ஜனவரி 12 முதல்

ஜனவரி 12ம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி நடைபெறவுள்ளது. பெர்த் நகரில் இப்போட்டி நடைபெறும்.

2 அபாயகரமான பவுலர்கள்

2 அபாயகரமான பவுலர்கள்

ஆஸ்திரேலிய அணியில் இரண்டு புதிய பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். ஸ்காட் போலன்ட் மற்றும் ஜோயல் பாரிஸ் ஆகியோரே அவர்கள். இருவருமே வேகப் பந்து வீச்சாளர்கள்.

பிரித்து மேய்ந்து விடுவார்களாமே

பிரித்து மேய்ந்து விடுவார்களாமே

இவர்கள் குறித்து விக்கெட் கீப்பர் மேத்யூ வாட் கூறுகையில், போலன்ட் அபாரமான திறமை படைத்தவர். இன்னிங்ஸின் கடைசிப் பகுதியில் மிகப் பிரமாதமாக பந்து வீசி எதிரிகளை காலி செய்வதில் கில்லாடி என்று கூறியுள்ளார்.

26 வயதுப் பையன்

26 வயதுப் பையன்

போலன்ட் 26 வயதான இளம் பந்து வீச்சாளர் ஆவார். பிரிஸ்பேன் ஸ்டார்ஸ் அணிக்காக பிக் பாஷ் தொடரில் விளஐயாடி அசத்தியவர். நிச்சயம் இந்திய வீரர்களுக்கு இவர் சவாலாக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

2 வருஷத்துக்கு முன்பு

2 வருஷத்துக்கு முன்பு

இவர் குறித்து வாட் மேலும் கூறுகையில், 2 வருடத்திற்கு முன்பு நான் போலன்ட்டுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரிடம், உன்னைப் போன்ற அருமையான பினிஷரை நான் பார்த்ததில்லை என்று பாராட்டினேன். இப்போது அவல் மேலும் வளர்ந்து விட்டார் என்றார்.

இந்தியர்களை மிரட்டுவார்

இந்தியர்களை மிரட்டுவார்

வாட் மேலும் கூறுகையில், நிச்சயம் இந்திய வீரர்களுக்கு அவர் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார். அதில் சந்தேகம் இல்லை. ஆஸ்திரேலிய அணிக்கு கடைசிக் கட்டத்தில் அவர்தான் கை கொடுப்பார் என நம்புகிறேன் என்றார்.

இதுவரை

இதுவரை

இதுவரை போலன்ட், 27 முதல் தர போட்டிகள், 28 லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் 13 டுவென்டி 20 போட்டிகளில் ஆடி 89 விக்கெட்களை மொத்தமாக சாய்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, January 8, 2016, 15:18 [IST]
Other articles published on Jan 8, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+