"ஐபிஎல்" மேக்ஸ்வெல்லின் அதிரடியில் சின்னாபின்னமான ஜிம்பாப்வே!
ஹராரே: ஐபிஎல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்று அதிரிபுதிரியாக ஆடிய கிளன் மேக்ஸ்வெல் இன்று ஜிம்பாப்வே அணியிடம் தனது பாய்ச்சலைக் காட்டி பயமுறுத்தி விட்டார்.
தனது புலிப் பாய்ச்சல் பேட்டிங்கால் ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்களை சோர்வடைய வைத்து விட்டார் மேக்ஸ்வெல். எப்பி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடியபோது எதிரணியினரை டென்ஷனாக்கினாரோ அதை விட பல மடங்கு ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்களைப் பயமுறுத்தி விட்டார் மேக்ஸ்வெல்.
வெறும் 43 பந்துகளில் மேக்ஸ்வெல் 93 ரன்களைக் குவித்த விட்டு ஓய்ந்தார்.

மேக்ஸ்வெல் - மார்ஷ்
ஹராரேவில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியின்போதுதான் இந்த வான வேடிக்கை நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 350 ரன்களைக் குவித்தது. அதில் முக்கியமானவர்கள் மேக்ஸ்வெல்லும், மிட்சல் மார்ஷும்தான்.

54 பந்துகளில் 109 ரன்கள்
மேக்ஸ்வெல்லும், மார்ஷும் சேர்ந்து 54 பந்துகளில் 109 ரன்களைக் குவித்தனர்.

கடைசி 10 ஓவர்களில் 147 ரன்கள்
இதில் கடைசி 10 ஓவர்களில் ஆஸ்திரேலியா 147 ரன்களைக் குவித்தது. இதற்கு மார்ஷும், மேக்ஸ்வெல்லும் தான் முக்கியக் காரணம்.

அடித்து நொறுக்கிய மார்ஷ்
கடந்த 14 மாதமாக ஒரு நாள் போட்டி எதிலும் ஆடாத மார்ஷ், 83 பந்துகளில் 89 ரன்களைக் குவித்தார்.

மேக்ஸ்வெல் அதிரடி
ஆனால் மேக்ஸ்வெல்தான் வான வேடிக்கையை காட்டினார். வந்த பந்தையெல்லாம் அடித்து நொறுக்கிய அவர் ஏதோ ஐபிஎல் போட்டியில் ஆடுவது போல ஆடினார். 46 பந்துகளைச் சந்தித்த அவர் 93 ரன்களைக் குவித்தார். இதில் 9 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடக்கம்.

பின்ச் - ஹாடின் பிரமாதம்
முன்னதாக ஆரோன் பின்ச் 67 ரன்களையும், பிராட் ஹாடின் 46 ரன்களையும் சேர்த்து நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.


Click it and Unblock the Notifications