Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அனைவரும் (ஆவலோடு) எதிர்பார்த்த ஆஸி. கிரிக்கெட்டின் வீழ்ச்சி ஆரம்பம்!

Recommended Video

தொடர் தோல்வி... வீழ்ச்சியை சந்திக்கும் ஆஸ்திரேலியா- வீடியோ

லண்டன்: இங்கிலாந்தில் ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் தோல்வியடைந்து ஒரு நாள் தொடரை இழந்துள்ளது. அதிலும், மூன்றாவது போட்டியில் 242 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து மிக மோசமான தோல்வி எனும் பரிதாப சாதனையை நிகழ்த்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, மொத்த கிரிக்கெட் ரசிகர்களின் மரியாதையையும் இழந்து, பரிதாபத்துக்குரிய நிலையை அடைந்தது. சிலர் அந்த அணி அதிலிருந்து விரைவில் மீண்டு வரும் என கூறினாலும், பெரும்பாலானோர் ஆஸ்திரேலிய அணி அடுத்த சில ஆண்டுகளுக்கு மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என கூறினார்கள். அணி வீரர்கள் மனதளவில் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீளவே பல காலம் பிடிக்கும் என கூறப்பட்டது.

அது உண்மை என்பது போல, அவர்கள் கூறியது தற்போது கண் முன்னே நடந்து வருகிறது. தென் ஆப்ரிக்க தொடரில் நடந்த பந்து சேதப்படுத்திய விவகாரத்திற்கு பின், இங்கிலாந்திற்கு எதிராக தற்போது நடந்து வரும் இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் தோற்று தொடரை இழந்துள்ளது ஆஸ்திரேலியா.

தொடர்ச்சியான மாற்றங்கள்

தொடர்ச்சியான மாற்றங்கள்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்குப் பின், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஓராண்டும், கமரோன் பாங்க்ராப்ட் ஆறு மாதங்களும் விளையாட தடை விதிக்கப்பட்டது. அப்போது அணியின் பயிற்சியாளராக இருந்த டாரன் லேஹ்மன் குற்றமற்றவர் என கூறப்பட்டாலும், அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகி விட்டார். தற்போது, ஜஸ்டின் லாங்கர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்டீவ் ஸ்மித் தடை செய்யப்பட்ட நிலையில், கேப்டன் பொறுப்புக்கு டிம் பெய்ன் அமர்த்தப்பட்டுள்ளார். மேலும், அணியில் பல புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

என்ன மாறினாலும் மாறாத மனநிலை

என்ன மாறினாலும் மாறாத மனநிலை

இவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்த பின்பும், வீரர்கள் மற்றும் ரசிகர்களின் மனநிலையில் அவ்வளவு எளிதில் மாற்றம் ஏற்படவில்லை என்பதே தற்போது ஏற்பட்டு வரும் தோல்விகளின் வெளிப்பாடு என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் என்றாலே தற்போது பந்து சேதப்படுத்திய நிகழ்வு தான் பேசப்படுகிறது.

 வீழ்ச்சிக்கான காரணங்கள்

வீழ்ச்சிக்கான காரணங்கள்

இந்த இங்கிலாந்து தொடரில் ஏற்பட்டு வரும் தொடர் தோல்விகளுக்கு, மிக முக்கிய காரணம், அனுபவம் குறைந்த வீரர்கள் தான். தற்போது அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களில், க்லென் மாக்ஸ்வெல் 84 ஒரு நாள் போட்டிகளிலும், ஷான் மார்ஷ் 56 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்கள். இவர்கள் தவிர்த்து அனைவரும், மிகச் சொற்ப போட்டிகளிலேயே விளையாடியுள்ளார்கள். கேப்டன் பதவியில் அமர்த்தப்பட்டுள்ள டிம் பெய்ன் 33 ஒரு நாள் போட்டிகள் மட்டுமே விளையாடி உள்ளார். அனுபவமற்ற வீரர்களால் அனைத்து சூழ்நிலைகளையும் சமாளித்து விளையாட முடியவில்லை என்பதே தற்போதைய தோல்விகளுக்கு மிக முக்கிய காரணம்.

ஏளனப் பார்வையில்

ஏளனப் பார்வையில்

அதே போல, ஒரு சில வீரர்கள் தவறு செய்திருந்தாலும், ஒட்டு மொத்த அணியும், புதிய வீரர்கள் உட்பட பிற நாட்டு ரசிகர்கள் மற்றும் மீடியாவின் கேலிக்கும், ஏளனப் பார்வைக்கும் ஆளாகிறார்கள். இந்த அழுத்தத்தை மீறி வருவதும் புதிய வீரர்களுக்கு சவாலான விஷயம்தான். இந்த தோல்விகளுக்குப் பின், கடந்த 34 ஆண்டுகளில் ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா, தன் மிக மோசமான ரேங்கிங்கை பதிவு செய்து ஆறாம் இடம் பெற்றுள்ளது. ஒரு காலத்தில் அசைக்கமுடியாத அணியாக இருந்த வெஸ்ட் இண்டீஸ், தற்போது மோசமான நிலையில் உள்ளதை போல ஆஸ்திரேலியாவும் ஆகுமா? அல்லது பீனிக்ஸ் பறவையாக மீண்டு வருமா? என பொறுத்து இருந்து பார்ப்போம்.








Story first published: Thursday, June 21, 2018, 9:40 [IST]
Other articles published on Jun 21, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+