Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி உலககோப்பை ஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றம்.. கடைசி நேரத்தில் தவறை சரி செய்த ஆஸி

மும்பை : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் தற்போது அதிரடி மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி கடந்த ஆறாம் தேதி அறிவிக்கப்பட்டது.

இதில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய வீரர்கள் அறிவிக்கப்பட்டிருந்தார்கள். இந்த ஆஸ்திரேலிய அணியில் முக்கிய பேட்ஸ்மேன் ஆக கருதப்பட்ட மார்னஸ் லாபஸ்சேன் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

Australia squad announced for ICC World cup 2023 - Marnus labuschagne announced

தற்போது ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக ரன்களை குவிக்கும் வீரர்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியின் நடுவரிசையில் ஸ்மித் உள்ள நிலையில் மார்னஸ் லாபஸ்சேன் தேவையில்லாத நபர் என கருதி ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அவரை நீக்கியது. இதனை அடுத்து நடைபெற்ற தென்னாப்பிரிக்கா தொடரின் மார்னஸ் ஏற்கனவே காயம் அடைந்த வீரருக்கு மாற்று வீரராக கடைசி நேரத்தில் பேட்டிங் செய்ய வந்தார்.

ஆனால் அதில் சிறப்பாக விளையாடிய மார்னஸ் லாபஸ்சேன் அதிகமான சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து தடுமாறிய போது எல்லாம் மார்னஸ் லாபஸ்சேன் மட்டும்தான் ரன்களை சேர்த்தார். குறிப்பாக உலகக்கோப்பை அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு மார்னஸ் லாபஸ்சேன், 124 ,80,15, 20, 44,39, 27 ,72 ஆகிய ரன்களை அடித்தார்.இதில் ஒரு சதம், இரண்டு அரை சதம் அடங்கும்.

இந்த நிலையில் மார்னஸ் லாபஸ்சேன் தற்போது உலகக் கோப்பை தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக ஏற்கனவே அணியில் இருந்த சுழற் பந்துவீச்சாளர் ஏஸ்டன் எகார் அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார். ஏனெனில் அணியில் இடம் பெற்றிருக்கக் கூடிய மேக்ஸ்வெல் இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் சுழற் பந்து வீச்சில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

இதேபோன்று தற்போது காயம் அடைந்திருக்கும் டிராவிஸ் ஹெட்டுக்கும் ஆஸ்திரேலியா உலகக் கோப்பை அணியில் இடம் கிடைத்திருக்கிறது. அவர் முதல் இரண்டு வாரத்தில் எந்த போட்டியிலும் பங்கேற்க மாட்டார். அதன் பிறகு இடம் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Thursday, September 28, 2023, 19:43 [IST]
Other articles published on Sep 28, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+