For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 உலக கோப்பை - ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு.. இந்திய தொடருக்கான அணியும் வெளியானது

மெல்போர்ன்: டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டனாக ஆரோன் பிஞ்ச் மீண்டும் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

Ben Stokes, Ben Foakes-ன் அதிரடி Centuries! South Africa-வை சோதித்த England | *Cricket

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, தற்போது தனது சொந்த மண்ணில் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் நோக்கில் களமிறங்குகிறது.

வரும் அக்டோபர் 16ஆம் தேதி டி20 உலகக் கோப்பை தொடங்குகிறது. பிரதான சுற்று வரும் 22ஆம் தேதி ஆரம்பிக்கிறது.

டாப் ஆர்டர்

டாப் ஆர்டர்

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய அணியை தற்போது பார்க்கலாம். தொடக்க வீரராக டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஸ் அணியில் இடம்பெற்று இருக்கிறார். முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்துக்கும் தேர்வுக்குழுவினர் டி20 போட்டியில் வாய்ப்பு வழங்கியுள்ளனர்.

நடுவரிசை

நடுவரிசை

ஆனால், அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா என தெரியவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு 2 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சேர்க்கப்பட்டுள்ளனர். மேத்தீவ் வெட் மற்றும் ஜாஸ் இங்கிலிஸ் ஆகியோர் அணியில் தங்களது இடத்தை உறுதி செய்துள்ளனர். அதிரடி வீரர் மேக்ஸ்வெல் இம்முறை நடுவரிசையில் களமிறங்குகிறார்.

டிம் டேவிட்க்கு வாய்ப்பு

டிம் டேவிட்க்கு வாய்ப்பு

சிங்கப்பூரை சேர்ந்த டிம் டேவிட், உலகம் முழுவதும் உள்ள டி20 தொடரில் விளையாடி பிரபலம் அடைந்ததன் மூலம் தற்போது அவர் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட உள்ளார். முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.சுழற்பந்துவீச்சாளராக ஆடம் சாம்பா, ஏஸ்டன் ஏகார் ஆகியோர் விளையாடுகின்றனர்.

வேகப்பந்துவீச்சாளர்கள்

வேகப்பந்துவீச்சாளர்கள்

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளராக மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஹேசல்வுட், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் வேகப்பந்துவீச்சாளராக சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த முறை டி20 உலகக் கோப்பை வென்ற 14 வீரர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர். சுழற்பந்துவீச்சாளர் மிட்செல் ஸவாப்சனுக்கு பதில் டிம் டேவிட் இடம்பெற்றுள்ளார்.இதே அணி தான் இந்தியாவுக்கு எதிராக களமிறங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் வார்னருக்கு ஒய்வு வழங்கப்பட்டு கேமரான் கிரின் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி விவரம்

ஆஸ்திரேலிய அணி விவரம்

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஸ்மித், டேவிட் வார்னர், மேக்ஸ்வெல்,ஸ்டார்க், ஸ்டோனிஸ், மேத்தீவ் வெட், டிம் டேவிட், கம்மின்ஸ் ஆடம் சாம்பா, ஏஸ்டன் ஏகார், ஹேசல்வுட், மிட்செல் மார்ஷ், ஜாஸ் இங்க்லிஸ், ரிச்சர்ட்சன்

Story first published: Thursday, September 1, 2022, 11:23 [IST]
Other articles published on Sep 1, 2022
English summary
Australia squad for ICC T20 World cup and India series announced டி20 உலக கோப்பை - ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு.. இந்திய தொடருக்கான அணியும் வெளியானது
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+