For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்.. பலம் வாய்ந்த ஆஸி, அணி அறிவிப்பு - விவரம்

மெல்போர்ன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரி;ன இறுதிச் சுற்றுக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 மற்றும் 2023ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் 2 இடம் பிடித்த இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இறுதிப் போட்டியில் மோதுகிறது.

இதற்கான 17 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தாய் காலமான நிலையில், சில மாதங்களாக கிரிக்கெட் போட்டியில் பங்கேற்காத நிலையில், தற்போது மீண்டும் கேப்டனாக திரும்பியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டனாக ஸ்மித் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Australia squad for ICC World test championship final announced

கடந்த சில காலமாக டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி வரும் டேவிட் வார்னர், ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பியுள்ளார். ஆல்ரவுண்டர்கள் கேமிரான் கிரீன், மிட்செல் மார்ஷ் ஆகியோருக்கும் அணியல் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய டாட் மார்ஃபி , நாதன் லயனுக்கு துணையாக சேர்க்கப்பட்டுள்ளார்.

வேகப்பந்து வீச்சு பிரிவில் கேப்டன் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜாஸ் ஹேசல்வுட் மற்றும் போலாண்ட் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்க காத்துள்ளனர். இதே போன்று இந்திய தொடரில் சிறப்பாக செயல்பட்ட மாட் குஹான்மேன் மற்றும் பீட்டர்ஸ் ஹாண்ட்ஸ்கோம்ப் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். தற்போது 17 பேர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இறுதி நேரத்தில் 2 வீரர்கள் நீக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணி விவரம் : பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்மித் (துணை கேப்டன்), மார்னஸ் லாபஸ்சேன், டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மேத்தீவ் ரென்ஷா, மார்கஸ் ஹாரிஸ், மிட்செல் மார்ஷ், கேமிரான் கிரீன், அலெக்ஸ் கேரி, ஜோஸ் இங்கிலிஸ், நாதன் லயான், டாட் மர்ஃபி, மிட்செல் ஸ்டார்க், ஜாஸ் ஹேசல்வுட் போலாண்ட்

Story first published: Wednesday, April 19, 2023, 8:53 [IST]
Other articles published on Apr 19, 2023
English summary
Australia squad for ICC World test championship final announced இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்.. பலம் வாய்ந்த ஆஸி, அணி அறிவிப்பு - விவரம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+