Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு காட்டுத்தனமான பந்து..! வந்தது தலைவலி, வாந்தி..! விளைவு ரெஸ்ட்.. இது ஸ்மித்தின் பரிதாபம்

Recommended Video

Smith floored by Archer| ஸ்மித் காயத்தால் ஏற்பட்ட சர்ச்சை... பதறிய ஆர்ச்சர்

லண்டன்: ஆர்ச்சர் பவுன்சர் பந்தில் காயமடைந்த ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித், 2வது டெஸ்டில் இருந்து விலகியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாரம்பரிய ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. இம்முறை உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடராகவும் கருதப்படுவதால், ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரு அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி, டிராவில் முடிந்தது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த டெஸ்டில், இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர் வீசிய 148 கி.மீ., வேக பவுன்சர், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸித்தின் பின் கழுத்துப்பகுதியை பதம் பார்த்தது.

காயம்

காயம்

இதையடுத்து ஸ்மித் வெளியேறினார். மீண்டும் களமிறங்கி கூடுதலாக 12 ரன்கள் சேர்த்த நிலையில் சதத்தை எட்ட முடியாமல் அவுட்டானார். அவரது உடல்நிலை குறித்தும், காயம் குறித்தும் பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகின. ரசிகர்களும் அவரது காயம் பற்றி அறிந்து கவலை அடைந்தனர்.

ஸ்மித் விலகல்

ஸ்மித் விலகல்

இந்நிலையில் இரண்டாவது டெஸ்டில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் விலகுவதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

லேசான தலைவலி

லேசான தலைவலி

காயமடைந்த ஸ்டீவ் ஸ்மித், மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப் பட்டார். இரவு முழுதும் நன்றாக தூங்கிய ஸ்மித், அதிகாலையில் லேசான தலைவலி உள்ளதாக கூறியிருக்கிறார். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் 2வது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.

அறிவிக்கப்படும்

அறிவிக்கப்படும்

அவர் அடுத்த டெஸ்டில் பங்கேற்பது குறித்து தற்போதைய முடிவு இதுதான். எதிர்வரும் நாட்களில் அவர் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது பற்றி கண்காணிக்கப்படும். ஸ்மித் குணமடையும் விதத்தை பொறுத்தே அவர் விளையாடுவது பற்றி அறிவிக்கப்படும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Monday, August 19, 2019, 14:31 [IST]
Other articles published on Aug 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+