Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தெறிக்கவிட்ட இந்தியா.. மெர்சலான ஆஸ்திரேலியா

கொல்கத்தா: இந்தியா - இலங்கை தொடர் துவக்கத்தில் இந்தியா ஒயிட் வாஷ் செய்யும் என்று எவரும் கணிக்கவில்லை. ஆனால், டெஸ்ட், ஒருதினப் போட்டி, டி-20 என 9-0 கணக்கில் அபார வெற்றி பெற்றது இந்திய கிரிக்கெட் அணி.

அதே நேரத்தில் வங்கதேசம் சென்ற ஆஸ்திரேலியா அணி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. போட்டிக்கு முன்பாக, குட்டி அணியான வங்கதேசத்தை ஆஸ்திரேலியா துவம்சம் செய்துவிடும் என்று கணித்தார்கள்.

ஆனால், முதல் டெஸ்டில் வங்கதேசம் வென்று அசத்தியது. இரண்டாது டெஸ்டில் வென்று ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்து ஒருவழியாக பெருமூச்சுவிட்டது.

கடினமாக இல்லையே

கடினமாக இல்லையே

அதன்பிறகு, இந்தியாவுக்கு வந்துள்ளது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி. இரு அணிகளும் மிகவும் வலுவான அணிகள் என்பதால், போட்டி மிகவும் கடினமாக இருக்கும். இந்தியாவுக்கு மிகப் பெரிய சவாலாகவே இருக்கும் என்று முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் நிபுணர்கள் எச்சரித்தனர்.

சென்னையில் அசத்தல்

சென்னையில் அசத்தல்

சென்னையில் நடந்த முதல் ஒருதினப் போட்டியில் மழையால், ஆஸ்திரேலியாவுக்கு சற்று கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் வென்று 1-0 என, இந்தியா முன்னிலை பெற்றது. கோல்கட்டாவில் மழை பெய்து வந்ததால், போட்டி நடக்குமா என்ற சந்தேகம் இருந்த நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தில், 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என, அனைத்து துறைகளிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.

புவனேஷ்வர் குமார் அசத்தல்

புவனேஷ்வர் குமார் அசத்தல்

கேப்டன் விராட் கோஹ்லி, 92 ரன்கள், அஜிங்யா ரகானே 55 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் பெரிய அளவுக்கு சோபிக்கவில்லை. 253 ரன்களை சுலபமாக எடுத்துவிடலாம் என்று நினைத்த ஆஸ்திரேலியாவுக்கு புவனேஷ்குமார் முதலில் தடை போட்டார். ஹாட்ரிக் சாதனையாளர் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பூம்ரா, ஹார்திக் பாண்டியா என அனைவரும் சிறப்பாக பந்து வீசி, விக்கெட்களை வீழ்த்தினர்.

மெர்சல் வெற்றி

மெர்சல் வெற்றி

டேய் இந்த திறமைகளை எங்கடா ஒழிச்சி வைச்சிருந்தீங்க என்று ஸ்டீவ் ஸ்மித் அணி கேட்கும் அளவுக்கு நமது வீரர்கள் ஒட்டுமொத்தமாக காட்டிய திறையில் மெர்சலான ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. அடுத்தது இந்தூரில் 24ம் தேதி நடக்கும் போட்டியில் வென்றால் தொடரை வென்றுவிடலாம்.

Story first published: Friday, September 22, 2017, 11:35 [IST]
Other articles published on Sep 22, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+