Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பார்டர் கவாஸ்கர் தொடருக்கு முன்பு சோகம்.. ஆஸி. கிரிக்கெட் கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஓய்வு.. என்ன காரணம்

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆரோன் பிஞ்ச் ஏற்கனவே கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து லிலகி, டி20 கிரிக்கெட் போட்டியில் மட்டும் விளையாடி வந்தார். தற்போது, முழுமையாக விலகி உள்ளதாக அறிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைக்கு ஆரோன் பிஞ்ச் ஆஸ்திரேலிய அணிக்கு தலைமை தாங்கி, சாம்பியன் பட்டத்தை வென்று தந்தார்.

ஓய்வுக்கு காரணம்

ஓய்வுக்கு காரணம்

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி டி20 கிரிக்கெட்டுக்கு புதிய கேப்டனை தேர்வு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறாமல், அரையிறுதிக்கு கூட செல்லாமல் முதல் சுற்றிலேயே வெளியேறியது. இத காரணமாக பிஞ்ச் இந்த முடிவை எடுத்துள்ளார்.

கருத்து

கருத்து

இது தொடர்பாக தனது கருத்தை வெளியிட்டுள்ள ஆரோன் பிஞ்ச், அடுத்த 2024ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் தாம் விளையாட முடியாது என்று நினைக்கிறேன். எனவே இது தான் நான் ஓய்வு பெற சரியான தருணம். இனி அடுத்த வீரர் மற்றும் கேப்டனுக்கு புதிய அணியை கட்டமைக்க போதுமான நேரம் தர வேண்டும்.

மறக்க முடியாது

மறக்க முடியாது

என்னுடைய குடும்பத்திற்கும், சக அணி வீரர்களுக்கும், பயிற்சியாளருக்கும், ரசிகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் விளையாடி வருகிறோம். 2021 டி20 உலக கோப்பை மற்றும் 2015ஆம் ஆண்டு உலக கோப்பையை நாங்கள் வெற்றி பெற்றது, என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம்.

3120 ரன்கள்

3120 ரன்கள்

ஆஸ்திரேலிய அணிக்காக 12 ஆண்டுகளில் பல ஜாம்பவான்களுடன் இணைந்து விளையாடியதை பெருமையாக நினைக்கிறேன். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை ஆரோன் பிஞ்ச் பெற்றுள்ளார். இதுவரை 103 சர்வதேச டி20 போட்டியில் விளையாடியுள்ள பிஞ்ச் 3120 ரன்களை அடித்து உள்ளார். இதில் 2 சதங்களும், 19 அரைசதங்களும் அடங்கும்.

புதிய கேப்டன் யார்?

புதிய கேப்டன் யார்?

இதில் அதிகபட்சமாக 172 ரன்கள் அடித்து இருக்கிறார். டி20 உலகக்கோப்பையில் விளையாடிய பிறகு ஆரோன் பிஞ்ச், பிக் பேண் லீக டி20 தொடரில் விளையாடினார். இதில் 428 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் சராசரி 38,90 ரன்கள் அடித்திருக்கிறார். மேத்தீவ் வேட் ஆஷ்டன் டிரனர் உள்ளிட்ட வீரர்கள் அடுத்த கேப்டனாக வர அதிக வாய்ப்புள்ளது.

Story first published: Tuesday, February 7, 2023, 15:34 [IST]
Other articles published on Feb 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+