டி20 உலககோப்பை: சோதனை மேல் சோதனை.. போதுமடா சாமி! ஆஸ்திரேலிய அணியில் மேலும் ஒரு வீரர் விலகல்
கொழும்பு: டி20 உலககோப்பை தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு சோகம் மேல் சோதனை வந்துள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட தொடரை இழந்தது, பாட் கம்மின்ஸ் தொடரிலிருந்து விலகியது, டிம் டேவிட் காயம் என ஆஸ்திரேலிய அணி தடுமாறி வருகிறது.
தற்போது அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் காயம் காரணடாக டி20 உலககோப்பை தொடரின் முதல் சுற்றில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட், சிட்னியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால், அவருக்குப் பதிலாக, பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடிய வலதுகை வேகப்பந்து வீச்சாளர் சீன் அபோட், உலகக் கோப்பை அணியின் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.35 வயதான ஹேசில்வுட் 2025-26 ஆஷஸ் தொடரின் தொடக்கத்தில் தசைப்பிடிப்பு காரணமாக அவர் பங்கேற்கவில்லை. பின்னர், மீண்டும் அவருக்கு கணுக்கால் காயம் ஏற்பட்டது.
இது குறித்து பேசிய கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வுக்குழு தலைவர் டோனி டோடிமெய்ட், "ஜோஷ் தனது மறுவாழ்வு சிகிச்சையை இலங்கைக்குப் பயணம் செய்வதற்குப் பதிலாக, அவருக்குப் பழக்கமான சூழலில் வீட்டிலேயே தொடர்வது பயனுள்ளது" என்றார்.
ஜனவரி 31 அன்று, பேட் கம்மின்ஸ் தனது முதுகு வலியிலிருந்து மீண்டு வருவதால் உலகக் கோப்பையில் பங்கேற்கமாட்டார், அவருக்குப் பதிலாக பென் ட்வார்ஷூயிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது.இதற்கிடையில், பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை தவறவிட்ட கிளென் மேக்ஸ்வெல், நாதன் எல்லிஸ், டிம் டேவிட் ஆகியோர் பிப்ரவரி 5, வியாழன் அன்று நெதர்லாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டிக்கு முன்னதாக, செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஆஸ்திரேலிய அணியில் இணைவார்கள்.
2021 T20 உலகக் கோப்பை சாம்பியனான ஆஸ்திரேலியா, 2026 உலகக் கோப்பையில் குரூப் B-யில் இடம் பெற்றுள்ளது. தனது முதல் போட்டியை பிப்ரவரி 11 கொழும்பில் அயர்லாந்துට எதிராகவும், பிப்ரவரி 13 ஜிம்பாப்வே எதிராகவும் கொழும்பில் விளையாடவுள்ளது.
உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி :மிட்சல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், சேவியர் பார்ட்லெட், கூப்பர் கொனாலி, டிம் டேவிட், பென் ட்வார்ஷூயிஸ், கேமரூன் கிரீன், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ குனமான், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ரென்ஷா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜாம்பா.மாற்று வீரர்: சீன் அபோட்.


Click it and Unblock the Notifications