For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு.. இந்தியா, இலங்கையை குறிவைத்து பலே டி20 உலகக்கோப்பை பிளான்

சிட்னி: 2026 புத்தாண்டு பிறந்த கையோடு டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த முறை அந்த அணி எடுத்திருக்கும் சில முடிவுகள் கிரிக்கெட் விமர்சகர்களையே புருவம் உயர்த்த வைத்துள்ளது. வரும் பிப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கான இந்த அணியில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். அதன் பின்னணியில் முக்கிய திட்டமும் உள்ளது.

பொதுவாக உடற்தகுதி இல்லாத வீரர்களைத் தொடருக்கு முன்பே கழட்டிவிடுவது வழக்கம். ஆனால், ஆஸ்திரேலியா இம்முறை ஒரு பெரிய 'ரிஸ்க்' எடுத்துள்ளது. அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களான பேட் கம்மின்ஸ் (முதுகு வலி), ஜோஷ் ஹேசல்வுட் (தசைப்பிடிப்பு) மற்றும் அதிரடி பினிஷர் டிம் டேவிட் ஆகிய மூவருமே காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை.

Australia T20 World Cup 2026 Squad Injured Stars Pat Cummins Hazlewood Included in Spin-Heavy Team

இருந்தாலும், உலகக்கோப்பை தொடங்குவதற்குள் இவர்கள் தேறிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் தேர்வுக்குழு இவர்களை அணியில் சேர்த்துள்ளது. "இவர்கள் மூவரும் நல்ல முன்னேற்றம் கண்டு வருகின்றனர். உலகக்கோப்பைக்குத் தயாராகிவிடுவார்கள்" என்று தேர்வுக்குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி அடித்துச் சொல்கிறார்.

மிட்செல் ஸ்டார்க் இல்லை.. ஆனால் ஒரு சர்ப்ரைஸ்!

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து மிட்செல் ஸ்டார்க் ஓய்வு பெற்றுவிட்டதால், அவருக்கு மாற்றாக அதே வேகத்துடன் வீசக்கூடிய மாற்று வீரரைத் தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தியா மற்றும் இலங்கை ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், வேகத்தை குறைத்து சுழலை நம்பி களமிறங்குகிறது ஆஸ்திரேலியா. இதுதான் இந்த டி20 உலகக்கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியா வகுத்துள்ள முக்கிய வியூகமாக பார்க்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, கூப்பர் கனோலி என்ற இளம் வீரரை அணியில் சேர்த்துள்ளனர். கடந்த 12 டி20 போட்டிகளில் இவர் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடவில்லை என்றாலும், சுழற்பந்து வீச்சுக்கு உதவும் ஆடுகளங்களில் இவர் மேட்ச் வின்னராக இருப்பார் என நம்பப்படுகிறது.

ஏற்கனவே, டி20 போட்டிகளில் தங்களின் 4 ஓவர்களையும் முழுமையாக வீசி வரும் ஆடம் ஜம்பா, மேக்ஸ்வெல் ஆகியோருடன் இவரும் மூன்றாவது சுழற் பந்துவீச்சாளராக இடம் பெற்றுள்ளார்.

பிப்ரவரி 11 முதல் வேட்டை ஆரம்பம்

ஆஸ்திரேலிய அணி தனது முதல் போட்டியில் பிப்ரவரி 11-ம் தேதி கொழும்புவில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. குரூப் சுற்றுப் போட்டிகள் இலங்கையில் நடைபெற்றாலும், சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றால் அவர்கள் இந்தியாவில் விளையாடுவார்கள்.

டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி:

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கனோலி, பேட் கம்மின்ஸ், டிம் டேவிட், கேமரூன் கிரீன், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ குஹ்னேமன், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜம்பா.

Story first published: Thursday, January 1, 2026, 9:40 [IST]
Other articles published on Jan 1, 2026
English summary
Australia T20 World Cup 2026 Squad: Injured Stars Pat Cummins, Hazlewood Included in Spin-Heavy Team
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+