Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெரிய ரிஸ்க்.. 80% இருந்தாலே போதும்.. டேவிட் வார்னர் எதிர்காலத்தோடு விளையாடும் ஆஸி.. அவ்வளவு பயமா?

சிட்னி: ஆஸ்திரேலிய அணியின் ஓப்பனிங் வீரர் வார்னர் முழு பிட்னசில் இல்லை என்றாலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கும் எண்ணத்தில் ஆஸ்திரேலி அணி இருப்பதாக கூறுகிறார்கள்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்டில் இந்தியா அதிரடி வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 195 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ஆல் அவுட் ஆனது.இரண்டாவது இன்னிங்சிலும் ஆஸ்திரேலியா 200 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்து 326 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் 2வது இன்னிங்ஸில் இந்தியா 2 விக்கெட்டிற்கு 70 ரன்கள் எடுத்து வென்றது.

எப்படி

எப்படி

இந்த போட்டியில் அடைந்த தோல்வி ஆஸ்திரேலிய அணியை பெரிய அளவில் பாதித்து இருக்கிறது. இந்திய அணியை எளிதாக வீழ்த்தி விடலாம். கோலி இல்லை, இந்தியாவை வாஷ் அவுட் செய்து விடலாம் என்று நினைத்த ஆஸ்திரேலியா அணி பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது.

மோசம்

மோசம்

பல கனவுகளோடு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி மிக மோசமான தோல்வியை தழுவி உள்ளது. இந்த தொடரில் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்றால் ஆஸ்திரேலியா உடனே தனது பேட்டிங் ஆர்டரில் மாற்றம் செய்ய வேண்டும். சில வீரர்களை நீக்கிவிட்டு, முக்கியமான வீரர்களை கொண்டு வர ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.

திட்டம் என்ன

திட்டம் என்ன

அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் மீண்டும் களமிறங்க உள்ளார். ஆனால் இதில் என்ன சிக்கல் என்றால் அவர் இன்னும் முழு பிட்னசுக்கு திரும்பவில்லை . டேவிட் வார்னருக்கு காலில் அடிபட்டு இருந்தது. அவர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அவர் 80% மட்டுமே இதுவரை குணமாகி உள்ளார்.

வார்னர்

வார்னர்

வார்னர் இன்னும் தனது பிட்னஸை நிரூபிக்கவில்லை. இப்படி இருக்கும் போது அவரை அவசரப்பட்டு அணியில் எடுக்க ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆனால் இது டேவிட் வார்னருக்கு பெரிய சிக்கலாக மாறும். அவர் மேலும் காயம் அடைய இது வழி வகுக்கும்.

ஓப்பனிங்

ஓப்பனிங்

இந்திய பவுலர்களுக்கு எதிராக நல்ல ஓப்பனிங் வீரர்கள் வேண்டும் என்று ஆஸ்திரேலியா நினைக்கிறது. இதற்காக அவசர அவசரமாக டேவிட் வார்னரை அணிக்குள் கொண்டு வர அணி நிர்வாகம் நினைக்கிறது. இது டேவிட் வார்னரின் உடல்நிலையை பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

Story first published: Thursday, December 31, 2020, 15:49 [IST]
Other articles published on Dec 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+