Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன் அணியா இது??.. இங்கிலாந்தை பந்தாடிய ஆஸ்திரேலியா.. முதல் ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!

அடிலெய்ட்: சாம்பியன் அணி என்றும் பார்க்காமல் இங்கிலாந்தை கதறவிட்டு வெற்றி கண்டுள்ளது ஆஸ்திரேலிய அணி.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது இங்கிலாந்து. எனினும் நாட்டிற்கு திரும்பாமல் ஆஸ்திரேலியாவிலேயே சுற்றுப்பயணம் செய்து வருகிறது.

இரு அணிகளுக்கு இடையேயும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதி வருகின்றன. முதல் ஒருநாள் போட்டி இன்று அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

இங்கிலாந்தின் இன்னிங்ஸ்

இங்கிலாந்தின் இன்னிங்ஸ்

இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஜேசன் ராய் 6 (11), பிலிப் சால்ட் 14 (15) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். இதன்பின்னர் வந்த ஜேம்ஸ் வின்ஸ் 5 (6), சாம் பில்லிங்ஸ் 17 (22) ஆகியோரும் மிடில் ஆர்டரில் சொதப்பியதால் 118 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

ஒற்றை ஆள் போராட்டம்

ஒற்றை ஆள் போராட்டம்

ஒருபுறம் விக்கெட்கள் சரிந்தாலும் மற்றொருபுறம் டேவிட் மாலன் தனி ஆளாக அணியின் ஸ்கோரை தூக்கி நிறுத்தினார். சிறப்பாக விளையாடிய அவர் 128 பந்துகளில் 12 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 134 ரன்களை குவித்து அசத்தினார். இதனால், இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 287 ரன்களை குவித்தது.

பந்தாடிய ஓப்பனர்கள்

பந்தாடிய ஓப்பனர்கள்

கடின இலக்கை துரத்திக் களமறிங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அட்டகாசமான தொடக்கம் கிடைத்தது. ஓப்பனிங் வீரர்கள் டேவிட் வார்னர் 86 (84), டிராவிஸ் ஹெட் 69 (57), என சிறப்பான அடிதளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதன்பின்னர் வந்த ஸ்டீவன் ஸ்மித் 80 (78) என ஆஸ்திரேலியாவின் அதிரடியை தொடர்ந்து எடுத்து சென்றார்.

கடைசி நேர அதிரடி

கடைசி நேர அதிரடி

இதன்பின்னர் வந்த அலெக்ஸ் ஹேரி 21 (28), கேமரூன் கிரீன் 20 (28) ஆகியோர் கடைசி நேர அதிரடி காட்ட, ஆஸ்திரேலிய அணி 46.5 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து 291 ரன்களை எட்டியது. இதனால் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியையும் பெற்ற தொடரில் முன்னிலை அடைந்தது.

Story first published: Thursday, November 17, 2022, 20:53 [IST]
Other articles published on Nov 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+