Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 முறை மழை குறுக்கிட்ட போட்டியில், ஸ்காட்லாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸி.!

ஹோபர்ட்: ஸ்காட்லாந்துக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவில் உள்ள ஹோபர்ட் மைதானத்தில் இன்று பகல் இரவு ஆட்டமாக நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா- ஸ்காட்லாந்து அணிகள் மோதின.

Australia thrash Scotland by 7 wickets

நாணய சுழற்சியில் வென்ற ஆஸ்திரேலியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்காட்லாந்து ஆஸ்திரேலியாவின் அனல் பறக்கும் பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தது.

ஸ்காட்லாந்து அணிக்கு கோட்ஜெர், மெக்லியாடு தொடக்கம் கொடுத்தனர். ஸ்டார்க் 'வேகத்தில்' கோட்ஜெர் 'டக்' அவுட்டானார். மெக்லியாடு (22), மம்சன் (0), கொலேமென் (0), பெரிங்டன் (1) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

மாச்சான் (40), கிராஸ் (9) கம்மின்சிடம் சிக்கினர். ஸ்காட்லாந்து அணி 25 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

பின் மீண்டும் போட்டி தொடங்கியதும் ஜோஷ் டேவி (26), வார்டுலா (0), ஸ்டார்க் 'வேகத்தில்' நடையை கட்டினர். இதனால் ஸ்காட்லாந்து அணி 25.4 ஓவரில் 130 ஓட்டங்களுக்கு சுருண்டது.

மைக்கேல் லீஸ்க் (23) ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரோன் பின்ச் (20), ஷேன் வாட்சன் (24), அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் (47) கைகொடுத்தனர்.

அவுஸ்திரேலிய அணி 13.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 92 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின், மீண்டும் போட்டி தொடங்கியதும், டேவிட் வார்னர், ஜேம்ஸ் பால்க்னர் ஜோடி அதிரடியாக ரன்களை சேர்த்தது.

இதனால் ஆஸ்திரேலிய அணி 15.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பால்க்னர் (16), வார்னர் (21) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆறு போட்டியிலும் தோல்வி அடைந்த ஸ்காட்லாந்து அணி பரிதாபமாக வெளியேறியது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 9 புள்ளிகளுடன் 'ஏ' பிரிவில் 2வது இடத்தை உறுதி செய்தது.

Story first published: Saturday, March 14, 2015, 15:56 [IST]
Other articles published on Mar 14, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+