Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

110 மீட்டர் தூரத்தில் சிக்சர்.. டிம் டேவிட் மிரட்டல் பேட்டிங்.. வெஸ்ட் இண்டீஸ் அணியை பொளந்த ஆஸி.

பிரிஸ்பேன் : மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டி20 உலக கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடின.

முதல் போட்டியில் வெஸ்ட் அணி தோற்ற நிலையில், 2வது ஆட்டம் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் தடுமாற்றம்

முதலில் தடுமாற்றம்

இதனையடுத்து தொடக்க வீரராக டேவிட் வார்னர் மற்றும் கேமிரான் கிரின் ஆகியோர் விளையாடினர். கிரின் 1 ரன்னில் ஆட்டமிழக்க, கேப்டன் ஆரோன் பிஞ்ச் 15 ரன்களிலும், ஸ்மித் 17 ரன்களிலும் வெளியேறினர். கிளன் மேக்ஸ்வெல் 1 ரன்னில் ரன் அவுட்டாக ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. அப்போது டேவிட் வார்னர் மற்றும் டிம் டேவிட் இருவரும் இணைந்து வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சிதற அடித்தார்.

110 மீட்டர் சிக்சர்

110 மீட்டர் சிக்சர்

20 பந்துகளை எதிர்கொண்ட டிம் டேவிட் 3 சிக்சர், 4 பவுண்டரிகளை விளாசினார். இதில் டிம் டேவிட் அடித்த ஒரு சிக்சர் 110 மீட்டர் தூரம் வரை சென்றது. மறுபுறம் தனது அதிரடியை காட்டிய வார்னர் 41 பந்துகளில் 75 ரன்களை விளாசினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர் முடிவில் 178 ரன்களை எடுத்தது.

அபார பந்துவீச்சு

அபார பந்துவீச்சு

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் மெயர்ஸ் 6 ரன்களிலும், நிக்கோலஸ் புரான் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஜான்சன் சார்லஸ் 29 ரன்களும், பிராண்டன் கிங் 23 ரன்களும் எடுத்து தங்களது விக்கெட்டுகளை பறி கொடுத்தனர்.

ஆஸி, அபாரம்

ஆஸி, அபாரம்

ஜேசன் ஹோல்டர், போவெல், ஹூசைன் ஆகியோர் தங்களது ஸ்கோரை பெரியதாக மாற்றாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 147 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 2க்கு 0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

Story first published: Friday, October 7, 2022, 21:39 [IST]
Other articles published on Oct 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+