For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தொடக்கூடாத ஷாட்டை அடிச்சு அவுட்டாகியிருக்காரு... வார்னர் குறித்து மார்க் வா அதிருப்தி!

சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் துவங்கி நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்துவரும் நிலையில் 5 ரன்களில் அந்த அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் சிராஜ் பௌலிங்கில் அவுட்டாகியுள்ளார்.

இதனிடையே பொறுமையுடன் இல்லாமல் லூஸ் ஷாட்டை அடித்து ஆடியுள்ளதாக முன்னாள் வீரர் மார்க் வா டேவிட் வார்னர் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.

3வது டெஸ்ட் போட்டி

3வது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் துவங்கி நடைபெற்று வருகிறது. மழையின் குறுக்கீடு காரணமாக இடையிடையே போட்டி தடைபட்டு வருகிறது. இந்நிலையில் போட்டியின் 4வது ஓவரிலேயே அந்த அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் 5 ரன்களை மட்டுமே அடித்திருந்த நிலையில் அவுட்டானார்.

புஜாரா கேட்ச்

புஜாரா கேட்ச்

முகமது சிராஜ் வீசிய பந்தில் அவர் அவுட்டாகினார். பர்ஸ்ட் ஸ்லிப்பில் சத்தீஸ்வர் புஜாரா அவரது கேட்சை பிடித்தார். கடந்த 4 ஆண்டுகளில் 10 ரன்களுக்கு குறைவாக அவர் ரன்களை எடுத்தது இதுவே முதல் முறை. காயம் காரணமாக கடந்த இரு போட்டிகளில் பங்கேற்காத அவர், இந்த போட்டியில் 70 சதவிகிதம் மட்டுமே காயம் குணமான நிலையில் பங்கேற்றார்.

மார்க் வா அதிருப்தி

மார்க் வா அதிருப்தி

இந்நிலையில், துவக்க வீரராக களமிறங்கிய அவர் பொறுமையுடன் ஆடாமல் லூஸ் ஷாட்டை அடித்து ஆடி அவுட்டாகியுள்ளதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மார்க் வா அதிருப்தி தெரிவித்துள்ளார். பாக்ஸ் கிரிக்கெட்டிற்காக பேசிய அவர், முதல் 20 நிமிடங்களில் அத்தகைய ஷாட்டை தொட வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பட்டுள்ளார்.

களமிறக்கப்பட்ட வார்னர்

களமிறக்கப்பட்ட வார்னர்

இரண்டாவது போட்டியில் பெற்ற மோசமான தோல்வியை அடுத்து 70 சதவிகிதம் மட்டுமே குணமான நிலையில் டேவிட் வார்னரை மீண்டும் இந்த 3வது போட்டியில் களமிறக்கியுள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. தனது காயம் இன்னும் 100 சதவிகிதம் குணமாகவில்லை என்று வார்னரே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, January 7, 2021, 13:18 [IST]
Other articles published on Jan 7, 2021
English summary
Australia have rushed Warner's comeback as he himself accepted that he was not 100 per cent fit
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+