Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோவிட்ல தேறியாச்சு... பயிற்சியும் துவக்கியாச்சு... ஆஸ்திரேலியாவுடன் மோத தயாராகும் இந்திய அணி!

சிட்னி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் மோத சிட்னியில் முகாமிட்டுள்ளது இந்திய அணி.

அங்கு குவாரன்டைனில் ஈடுபட்டுள்ள இந்திய அணியினருக்கு கோவிட் -19 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அனைவருக்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் இந்திய அணி வீரர்கள் அனைவரும் தங்களது பயிற்சிகளை துவக்கியுள்ளனர்.

Australia vs India: Indian Team Clears COVID-19 Test In Australia

ஐபிஎல் 2020 தொடர் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக ஆஸ்திரேலிய தொடருக்காக இந்திய அணியினர் பயணம் மேற்கொண்டு தற்போது சிட்னியில் குவாரன்டைனில் உள்ளனர். இந்நிலையில், இந்திய வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அனைவருக்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது.

இதனிடையே, இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்டியா, பிரித்வி ஷா, முகம்மது சிராஜ் உள்ளிட்ட வீரர்கள் சிட்னி ஒலிம்பிக் பார்க்கின் உள் மைதானத்தில் நேற்றைய தினம் தங்களது பயிற்சிகளை துவக்கியுள்ளனர். ஸ்பின்னர் குல்தீப் யாதவ், பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், ஆல்-ரவுண்டர் ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், புஜாரா உள்ளிட்டவர்களும் தங்களது பயிற்சிகளை துவக்கினர். இதன் புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பிசிசிஐ பகிர்ந்துள்ளது.

Story first published: Sunday, November 15, 2020, 11:21 [IST]
Other articles published on Nov 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+