Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொரோனா இருக்கு... பாத்துக்கலாம்... 3வது போட்டி சிட்னியிலதான்... சிஏ திட்டவட்டம்

சிட்னி : கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி சிட்னி நடைபெறுவதில் சந்தேகம் இருந்தது.

இதையடுத்து நிலைமை கட்டுக்குள் இல்லாத பட்சத்தில் மெல்போர்னிலேயே 3வது டெஸ்ட் போட்டியை நடத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா முடிவெடுத்திருந்தது.

இந்நிலையில் சிட்னியின் போட்டியை நடத்துவதற்கான சூழல் காணப்படுவதாகவும், சிட்னியில் 3வது டெஸ்ட் போட்டி நடத்தப்படும் என்றும் தற்போது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் சிஇஓ தெரிவித்துள்ளார்.

சமநிலையில் அணிகள்

சமநிலையில் அணிகள்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், 1க்கு ஒன்று என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.

மெல்போர்னில் திட்டம்

மெல்போர்னில் திட்டம்

வரும் 7ம் தேதி இரு அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அங்கு கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ளதால் போட்டி நடைபெறுவதில் சுணக்கம் காணப்பட்டது. இதையடுத்து சிட்னியில் நிலைமை கட்டுக்குள் இல்லாத பட்சத்தில் மெல்போர்னில் போட்டியை நடத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா முடிவெடுத்திருந்தது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு

கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு

இதனிடையே, தற்போது சிட்னியில் நிலைமை போட்டியை நடத்தும்வகையில் உள்ளதால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியிலேயே நடத்தப்படும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தற்காலிக சிஇஓ நிக் ஹாக்லே அறிவித்துள்ளார்.

பாதுகாப்பான போட்டிக்கு திட்டம்

பாதுகாப்பான போட்டிக்கு திட்டம்

சிட்னியில் மக்களின் உடல்நலம் மற்றும் எல்லை பிரச்சினைகள் குறித்து கடந்த சில தினங்களாக தொடர்ந்து கண்காணித்து வந்ததாகவும், தற்போதைய சூழலில் அங்கு போட்டியை நடத்துவது சாத்தியம் என்றும ஹாக்லே மேலும் கூறினார். இந்த போட்டி மற்றும் பிரிஸ்பேனில் நடைபெறும் 4வது போட்டி இரண்டும் பாதுகாப்பாக நடத்தப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Story first published: Wednesday, December 30, 2020, 13:24 [IST]
Other articles published on Dec 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+