Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி டெஸ்ட் போட்டிகள்ல விளையாட மாட்டாரா? அதிர்ச்சியாவும் ஏமாற்றமாவும் இருக்கு...ஸ்டீவ் வா

சிட்னி : ஆஸ்திரேலியாவில் வரும் 27ம் தேதி துவங்கவுள்ளது ஆஸ்திரேலியா -இந்தியா தொடர். இதையொட்டி இந்த வாரத்தில் இந்திய அணியினர் ஆஸ்திரேலிய பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மட்டும் விளையாடிவிட்டு கேப்டன் விராட் கோலி இந்தியா திரும்பவுள்ளார்.

இந்நிலையில் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளின் இடையிலேயே நாடு திரும்புவது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளதாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஸ்டீவ் வா தெரிவித்துள்ளார்.

27ம் தேதி ஆரம்பம்

27ம் தேதி ஆரம்பம்

ஆஸ்திரேலியாவில் வரும் 27ம் தேதி துவங்கவுள்ளது இந்தியா -ஆஸ்திரேலியா தொடர். 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒரு பகலிரவு போட்டியும் அடங்கும். இது டிசம்பர் 17ம் தேதி துவங்கவுள்ளது.

2 வாரங்கள் குவாரன்டைன்

2 வாரங்கள் குவாரன்டைன்

இன்று ஐபிஎல் இறுதிப்போட்டி முடிவடையவுள்ள நிலையில், இந்த வாரத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு சென்று 2 வாரங்கள் குவாரன்டைனில் ஈடுபடவுள்ள இந்திய அணியினர் வரும் 27ம் தேதி துவங்கவுள்ள முதல் ஒருநாள் போட்டியிலும் பங்கேற்கவுள்ளனர்.

ஸ்டீவ் வா அதிர்ச்சி

ஸ்டீவ் வா அதிர்ச்சி

தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி இந்த தொடரின் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடவுள்ள கேப்டன் விராட் கோலி, அடுத்த 3 போட்டிகளில் விளையாடாமல் இந்தியா திரும்பவுள்ளார். இதையடுத்து ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஸ்டீவ் வா இந்த முடிவு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஸ்டீவ் வா உறுதி

ஸ்டீவ் வா உறுதி

ஆனாலும் குடும்பத்திற்குதான் முதலிடம் அளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள ஸ்டீவ் வா, ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இல்லாதநிலையில் இந்தியா வெற்றி பெற்ற சூழ்நிலை தற்போது உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார். ஆயினும் ரோகித் சர்மா, ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் அஜிங்க்யா ரஹானே போன்றவர்கள் மிகவும் பயங்கரமான வீரர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Tuesday, November 10, 2020, 18:13 [IST]
Other articles published on Nov 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+