Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னய்யா.. மைக்கேல் ஜாக்சன் மாதிரி டான்ஸ் ஆடுற? அதகளம் செய்த ஆஸி. வீரர்!

மெல்போர்ன் : ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி பவுன்சர் பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணியை அச்சுறுத்தி வந்தாலும், அந்த அணி சமாளித்து ஆடி வருகிறது.

வித்தியாசமாக பேட்டிங் செய்தார்

வித்தியாச பேட்டிங்

வித்தியாச பேட்டிங்

ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மேத்யூ வேட் பேட்டிங் செய்த போது, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க வித்தியாசமாக பேட்டிங் செய்தார். அதை வைத்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பின் ட்விட்டர் பக்கத்தில் கலாய்த்து மீம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா பேட்டிங்

ஆஸ்திரேலியா பேட்டிங்

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. நியூசிலாந்து அணி பந்துவீச்சில் மிரட்டினாலும் ஸ்டீவ் ஸ்மித் சமாளித்து ஆடி வருவதால் அந்த அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்துள்ளது.

நியூசிலாந்து மிரட்டல்

நியூசிலாந்து மிரட்டல்

நியூசிலாந்து அணி முதல் ஓவரிலேயே ஜோ பர்ன்ஸ் விக்கெட்டை வீழ்த்தியது, பர்ன்ஸ் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

சமாளித்த ஆஸ்திரேலியா

சமாளித்த ஆஸ்திரேலியா

அடுத்து வார்னர் 41 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் மார்னஸ் லாபுஷாக்னே - ஸ்டீவ் ஸ்மித் இணைந்து அணியை மீட்கும் பொறுப்பை ஏற்றனர். இருவரும் மிக நிதானமாக ஆடினர்.

லாபுஷாக்னே அசத்தல்

லாபுஷாக்னே அசத்தல்

மார்னஸ் லாபுஷாக்னே தொடர்ந்து தன் ஐந்தாவது டெஸ்ட் சதம் கடந்து அசத்தினார். 63 ரன்கள் அடித்த நிலையில் அவர் கோலின் டி கிரான்ட்ஹோம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மேத்யூ வேட் ஆட்டம்

மேத்யூ வேட் ஆட்டம்

அடுத்து வந்த மேத்யூ வேட் நியூசிலாந்து அணியின் பவுன்சர் பந்துவீச்சை சமாளித்து ஆடி வந்தார். இடையே ஒரு கடினமான யார்க்கர் பால் வீசப்பட்டது. அந்த பந்தை சமாளிக்க உடலை வளைத்தார் லாபுஷாக்னே.

கிண்டல்

கிண்டல்

கிட்டத்தட்ட கீழே விழுவது போல தன் உடலை பாதி அளவு சாய்த்த மேத்யூ, அந்த பந்தை தடுத்தார். அதை பார்த்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா ட்விட்டர் பக்கம், அந்த காட்சியை மைக்கேல் ஜாக்சனின் ஒரு நடனத்துடன் ஒப்பிட்டு இருந்தது.

என்ன பாடல்?

மைக்கேல் ஜாக்சன் "ஸ்மூத் கிரிமினல்" என்ற பாடலில் புவி ஈர்ப்பு விசைக்கு மாறாக கீழே சாய்வதைப் போன்ற நடன அசைவு இடம் பெற்று இருக்கும். அதே போல, மேத்யூ வேட் பேட்டிங் செய்ததாக கிண்டல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்டீவ் ஸ்மித் அபாரம்

ஸ்டீவ் ஸ்மித் அபாரம்

மேத்யூ வேட் 38 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டீவ் ஸ்மித் முதல் நாள் ஆட்ட நேர முடிவு வரை ஆட்டமிழக்காமல் 77 ரன்கள் குவித்து அணியை வழி நடத்தினார். ட்ராவிஸ் ஹெட் 25 ரன்கள் குவித்து களத்தில் இருக்கிறார்.

Story first published: Friday, December 27, 2019, 15:26 [IST]
Other articles published on Dec 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+