Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ப்பா.. என்னா போட்டி இது.. உலகை திரும்பி பார்க்க வைத்த ஆஸி, - பாக் டெஸ்ட்.. 5ம்நாளில் உள்ள செம த்ரில்

கராச்சி: ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் சிறப்பாக பேட்டிங் செய்ததால், போட்டி சமனில் முடிவடைந்தது. விக்கெட்டே விழாத பிட்ச் என விமர்சனமும் எழுந்தது.

கெத்து காட்டிய ஆஸ்திரேலியா

கெத்து காட்டிய ஆஸ்திரேலியா

இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி படு சுவாரஸ்யத்தை தூண்டியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணியில் வருபவர்கள் எல்லாம் அடிப்போம் என்பது போல பாகிஸ்தான் பவுலர்களை கதறவைத்தனர். உஸ்மான் கவாஜா 160 ரன்கள், ஸ்மித் 72, அலெக்ஸ் கேரி 93 என அடித்ததால் முதல் இன்னிங்ஸில் டிக்ளர் செய்யுங்கள் என பாக், ரசிகர்கள் கெஞ்சும் நிலைக்கு சென்றனர். இதனால் 556 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்து டிக்ளர் செய்தது.

சொதப்பிய பாகிஸ்தான்

சொதப்பிய பாகிஸ்தான்

பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்டார்க்கின் வேகத்தில் சிக்கி 5 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற, அணியில் ஒரு வீரர் கூட 40 ரன்களை தாண்டவில்லை. அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 36 ரன்களை அடித்தார். இதனால் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 148 ரன்களுக்கெல்லாம் சுருண்டது.

கெஞ்சிய ரசிகர்கள்

கெஞ்சிய ரசிகர்கள்

இதனால் 408 ரன்கள் என்ற பெரும் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்ஸை ஆடியது. இந்த முறையும் கவாஜா ரன் வேட்டை நடத்த 97 ரன்களுக்கு 2 விக்கெட்கள் மட்டுமே இழந்தது. இதற்கு மேல் இலக்கு தராதீர்கள், போட்டி டிராவில் முடிவடைய வேண்டாம் என பாகிஸ்தான் ரசிகர்கள் பலகையை ஏந்தி கெஞ்சினர். இதனால் 97 ரன்களுக்கே டிக்ளர் செய்தது. மேலும் 505 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

பாகிஸ்தான் தந்த அதிர்ச்சி

பாகிஸ்தான் தந்த அதிர்ச்சி

2 நாட்களில் 500 ரன்களுக்கு மேல் இலக்கா என்ற இக்கட்டான சூழலில் களமிறங்கிய பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவுக்கு பெரும் ட்விஸ்ட் கொடுத்தது. தொடக்கத்தில் 2 விக்கெட்கள் சரிந்த போதும், தொடக்க வீரர் அப்துல்லா சஃபீக் மற்றும் கேப்டன் பாபர் அசாம் சேர்ந்து வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் சீரான வேகத்தில் ரன்கள் உயர்ந்துள்ளன. 4ம் நாளின் முடிவில் அந்த பாகிஸ்தான் 192 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்துள்ளது. பாபர் அசாம் 102 ரன்களுடனும், அபுதுல்லா 71 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

கடைசி நாள் சுவாரஸ்யம்

கடைசி நாள் சுவாரஸ்யம்

கடைசி நாளான நாளை 90 ஓவர்கள் வீசப்படும். இதில் பாகிஸ்தான் அணி இன்னும் 314 ரன்களை அடிக்க வேண்டும். இது கடினமான விஷயமே கிடையாது. மற்றொரு புறம் ஆஸ்திரேலிய அணி இன்னும் 8 விக்கெட்களை எடுக்க வேண்டும். முதல் இன்னிங்ஸை போன்றே பவுலிங் வீசினால் வெற்றி பெற்றுவிடலாம். இதனால் யார் வெல்வார்கள் என்ற கடும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Tuesday, March 15, 2022, 19:32 [IST]
Other articles published on Mar 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+