Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

AUS vs PAK Test : அந்த தப்பை மட்டும் செய்ய மாட்டோம்.. ஆஸ்திரேலியாவை வீழ்த்த பாகிஸ்தான் போட்ட திட்டம்

பெர்த் : ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த உருது மொழியில் பேசக் கூடாது என பாகிஸ்தான் வீரர்கள் முடிவு செய்துள்ளனர். அதற்கு பதில் வேறு மொழியில் அவர்கள் பேச உள்ளதாகவும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது. கடந்த 1995ஆம் ஆண்டிற்கு பிறகு ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் அணியால் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெற முடியவில்லை.

கடைசியாக ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தான் வந்து ஆடிய டெஸ்ட் தொடரிலும் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து இருந்தது. அந்த தோல்விக்கு காரணமே ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா தான் என்ற முடிவுக்கு வந்து இருக்கின்றனர் பாகிஸ்தான் வீரர்கள்.

Australia vs Pakistan Test Series : Pakistan players decided not to speak in Urdu

ஆஸ்திரேலிய வீரரான உஸ்மான் கவாஜா, பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர். ஆனால், அவர் ஆஸ்திரேலியாவிலேயே பிறந்து வளர்ந்தவர் என்பதால் அவருக்கு உருது மொழி தெரியாது என நினைத்த பாகிஸ்தான் வீரர்கள் உருது மொழியில் போட்டியின் இடையே தங்கள் திட்டங்களை பேசி இருக்கின்றனர்.

அந்த திட்டங்களை உஸ்மான் கவாஜா மற்ற ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு கூறியதால் தான் அந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததாக நினைத்த பாகிஸ்தான் வீரர்கள் தற்போது அதை மாற்ற வேறு திட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.

இது பற்றி பேசிய பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி, இந்த முறை உஸ்மான் கவாஜாவை சமாளிக்க வேறு திட்டத்தை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என கூறி இருந்தார். அந்த திட்டம் என்ன என்பது தற்போது பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சி செய்யும் வீடியோ மூலம் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் உருது மொழியுடன், பஞ்சாபி மொழியும் பரவலாக பேசப்படும் மொழியாக உள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சியின் போது பஞ்சாபி மொழியில் பேசிய வீடியோ வெளியாகி இருக்கிறது. பொதுவாக உருது மொழியில் பேசும் பாகிஸ்தான் வீரர்கள் பஞ்சாபி மொழியில் பேசி வருவதை வைத்து பாகிஸ்தான் ஊடகங்கள், உஸ்மான் கவாஜாவை சமாளிக்கவே பாகிஸ்தான் அணி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறி வருகின்றனர்.

Story first published: Monday, December 4, 2023, 23:14 [IST]
Other articles published on Dec 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+