Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

AUS vs WI: வெறும் 27 ரன்னுக்கு ஆல்-அவுட்.. மிரள வைத்த ஆஸ்திரேலியா.. மண்ணைக் கவ்விய வெஸ்ட் இண்டீஸ்

கிங்ஸ்டன்: சபீனா பார்க்கில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஸ்காட் போலண்ட்-டின் அசுரத்தனமான பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிலைகுலைந்து படுதோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டெஸ்ட் தொடரின் இந்த மூன்றாவது போட்டி பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்றது. தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய மிட்செல் ஸ்டார்க், பிங்க் பந்து மூலம் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத பவுலிங்கை வீசினார்.

Mitchell Starc Scott Boland WI vs AUS Test Cricket Australia

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலியா 225 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 143 ரன்களும் எடுத்து இருந்தன. ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 121 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி இருந்தது. அடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியை, ஸ்டார்க் தனது முதல் ஓவரிலேயே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஜான் கேம்ப்பெல்லை வெளியேற்றிய அவர், அதே ஓவரில் கெவ்லான் ஆண்டர்சன் மற்றும் பிராண்டன் கிங் ஆகியோரையும் ஆட்டமிழக்கச் செய்தார். இது வெறும் ஆரம்பம் மட்டுமே. தனது இரண்டாவது ஓவரில் மைகைல் லூயிஸை எல்.பி.டபிள்யூ முறையில் வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 400வது விக்கெட்டைப் பதிவு செய்தார் ஸ்டார்க்.

ஷேன் வார்ன், கிளென் மெக்ராத் மற்றும் நாதன் லயன் ஆகியோருக்குப் பிறகு இந்த மைல்கல்லை எட்டிய நான்காவது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றார். தொடர்ந்து ஷாய் ஹோப்பையும் வெளியேற்றி, வெறும் 15 பந்துகளில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி, டெஸ்ட் வரலாற்றில் அதிவேகமாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையைப் படைத்தார்.

ஸ்டார்க்கின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 11 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. தேநீர் இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடர்ந்தபோது, ஸ்காட் போலண்ட் தனது பங்கிற்கு ஒரு ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் சரிவை மேலும் மோசமாக்கினார். ஜஸ்டின் கிரீவ்ஸ், ஷமர் ஜோசப் மற்றும் ஜோமெல் வாரிக்கன் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் அவர் ஆட்டமிழக்கச் செய்தார்.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 14.3 ஓவர்களில் வெறும் 27 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது மிகக் குறைந்த ஸ்கோராகும். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 9 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளையும், ஸ்காட் போலண்ட் 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த அபார பந்துவீச்சின் மூலம் ஆஸ்திரேலியா 176 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது.

Story first published: Tuesday, July 15, 2025, 8:02 [IST]
Other articles published on Jul 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+