இந்த வாரம் இவங்க உலக சாம்பியன்..! அடுத்த வாரம் யாரோ? மாத்தி, மாத்தி சொல்லும் கம்பீர்
மும்பை:இம்முறை உலக கோப்பை சாம்பியன் ஆஸ்திரேலியா தான் என்று அடித்து கூறுகிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர்.
உலக கோப்பை கிரிக்கெட் வரும் 30ம் தேதி முதல் ஜூலை 14 வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடக்கிறது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
ரவுண்டு ராபின் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டி நடக்கிறது. இந் நிலையில் உலக கோப்பையை ஆஸ்திரேலியா தான் வெல்லும் என்று இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும், 2011ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற அணியில் இருந்தவருமான கவுதம் கம்பீர் கணித்து உள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

ஆஸி. பலம்
இந்த உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலமாக உள்ளன. ஆனாலும் தொடரை கைப்பற்றும் வகையில் முழு பலத்துடன் ஆஸ்திரேலியா சிறந்து விளங்குகிறது. அந்த அணியில் பல்வேறு வீரர்கள் சிறப்பாக ஆடி வஇந்த உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலமாக உள்ளன. ஆனாலும் தொடரை கைப்பற்றும் வகையில் முழு பலத்துடன் ஆஸ்திரேலியா சிறந்து விளங்குகிறது. அந்த அணியில் பல்வேறு வீரர்கள் சிறப்பாக ஆடி வருகின்றனர். ருகின்றனர்.

சொந்த மண்ணில் போட்டி
ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து இங்கிலாந்துக்கு வாய்ப்பு இருக்கிறது. சொந்த மண்ணில் நடைபெறுவதால் இங்கிலாந்திற்கு கோப்பை கிடைக்கும் என்று சொல்ல வில்லை. இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக கடந்த சில ஆண்டுகளாக ஆடி வருகின்றனர்.

ஆஸி.க்கு வாய்ப்பு அதிகம்
எனவே இந்த உலக கோப்பை தொடரில் நிச்சயம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அல்லது இந்தியா ஆகிய 3 அணிகள் சிறப்பாக விளையாடும். இந்த 3 அணிகளில் ஒரு அணிக்கு உலக கோப்பை உறுதி, அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்புகள் அதிகம்.

பும்ரா காரணம்
இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அதிக ரன்களை குவிக்கும் வாய்ப்பு இருக்கிறது. வேகப்பந்துவீச்சாளர் பும்ரா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பார். அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என்றார்.


Click it and Unblock the Notifications