4வது ஒருநாள் போட்டியில்... ஆஸி.யிடம் போராடி தோற்ற இந்தியா!
பெங்களூர்: இந்தியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி தனது வெற்றிக்கணக்கை இந்தியாவில் துவங்கியுள்ளது.
இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்கள் எடுத்து இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது.
முதல் 3 ஒருநாள் போட்டிகளிலும் வென்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றிய நிலையில் 4வது ஒருநாள் போட்டி பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று பகல் இரவு ஆட்டமாக தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தங்கள் அணி முதலில் பேட் செய்யும் என தெரிவித்தார். இதையடுத்து அந்த அணி பேட் செய்தது.

இந்திய அணி
இந்திய அணியில் குல்தீப் யாதவ், பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, அக்சர் பட்டேல், உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இரண்டு மாற்றங்கள்
ஆஸ்திரேலிய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேக்ஸ்வெல், ஆஷ்டோன் அகர் நீக்கப்பட்டு விக்கெட் கீப்பர் வேட் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் சம்பா சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா 334 ரன்கள்
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், ஆஸி. அணி 5 விக்கெட்டுகளை இழந்து 334 ரன்களை எடுத்தது. அந்த அணியின் டேவிட் வார்னர் அதிகபட்சமாக 124 ரன்கள் எடுத்து கேதர் ஜாதவ் பந்தில் அக்சர் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

4 விக்கெட்டுகளை வீழ்த்திய உமேஷ் யாதவ்
அவரோடு ஓப்பனிங்கில் களமிறங்கிய ஆரோன் பின்ச் 94 ரன்களில், உமேஷ் யாதவ் பந்தில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 231 ரன்களை குவித்தது. இந்திய தரப்பில் உமேஷ் யாதவ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணி தோல்வி
இதனையடுத்து 335 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 313 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவிடம் போராடி தோல்வி அடைந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி தனது வெற்றிக்கணக்கை இந்தியாவில் துவங்கியுள்ளது.

இந்திய அணியின் கணக்கு
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஏற்கனவே 3 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 3-0 என்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியை தழுவியுள்ளது.


Click it and Unblock the Notifications