Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி.க்கு பயத்தை காட்டிய இந்திய சிங்க பெண்கள்.. போராடி 7 ரன் வித்தியாசத்தில் தோல்வி.. தொடரை வென்ற ஆஸி

மும்பை : இந்திய மகளிர் அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற நிலையில், வாழ்வா சாவா ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 4வது டி20 போட்டியில் களமிறங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய வீராங்கனைகள் களமிறங்கினர்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

பெத் மூனி 3 ரன்களிலும், தஹிலா மெக்ராத் 9 ரன்களிலும் ஆட்டமிழக்க, 30 ரன்கள் எடுத்த நிலையில் தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான அலீசா ஹெலி, 30 ரன்கள் எடுத்த நிலையில் ஓய்வு பெற்றார். இதனையடுதது ஜோடி சேர்ந்த கார்ட்னர் மற்றும் எலிசா பெர்ரி இந்திய பந்துவீச்சை சிதறடித்னர்.

 188 ரன்கள்

188 ரன்கள்

சிறப்பாக விளையாடிய கார்ட்னர் 27 பந்தில் 42 ரன்கள் விளாசினார். இதில் 3 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்ற எலிசா பெர்ரி 42 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். இறுதியில் கிரேஸ் 27 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலிய மகளிர் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது.

ஹர்மன்பிரித் கவுர்

ஹர்மன்பிரித் கவுர்

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ஸ்ருதி மந்தானா 16 ரன்களிலும், செஃபால வர்மா 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஜெமிமா ரொட்ரிகியூஸ் 8 ரன்களில் பெவிலியன் திரும்ப, ஹர்மன்பிரித் கவுர் அதிரடியாக விளையாடிய நிலையில், அரைசதத்தை 4 ரன்களில் தவறவிட்டு முக்கிய கட்டத்தில் பெவிலியன் திரும்பினார்.

 18 ரன்கள்

18 ரன்கள்

தேவிகா வைத்யா 26 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். கடைசி 2 ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 19வது ஓவரில் ரிச்சா கோஷ் 2 சிக்சர், ஒரு பவுண்டரியை விரட்ட அந்த ஓவரில் 18 ரன்கள் கிடைத்தது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது.

 போராடி தோல்வி

போராடி தோல்வி

அப்போது ஆட்டத்தின் முதல் பந்தும், 4வது பந்தும் பவுண்டரி செல்ல 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் இந்திய வீராங்கனைகளால் கடைசி ஓவரில் சிக்சர் அடிக்க முடியாத காரணத்தால் 20 ஓவர் முடிவில் இந்தியா 181 ரன்களுக்கு 5 விக்கெட் எடுத்து, 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Story first published: Saturday, December 17, 2022, 23:30 [IST]
Other articles published on Dec 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+