Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுதான் சரியான நேரம்.. கிரிக்கெட்டில் இருந்து விலகுகிறேன்.. ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லானிங் ஓய்வு

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மெக் லானிங் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அவருக்கு 31 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வயதின் அடிப்படையில் அவரால் இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் ஆட முடியும் என்றாலும் அவர் ஓய்வு முடிவை எடுத்துள்ளார்.

Australia Women Cricket captain Meg Lanning announces Retirement ahead of India series

மெக் லானிங் 2010ஆம் ஆண்டு தனது 18 வயதில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகமானார். அவர் ஆஸ்திரேலிய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகள், 103 ஒருநாள் போட்டிகள், மற்றும் 132 டி20 போட்டிகள் உட்பட 241 சர்வதேச போட்டிகளில் ஆடி இருக்கிறார்.

13 வருட கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலக இது சரியான நேரம் என்று மெக் லானிங் கூறி தன் ஓய்வை அறிவித்துள்ளார். "சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகுவது என்பது கடினமான முடிவு, ஆனால் இப்போதுதான் எனக்கு சரியான நேரம் என்று உணர்கிறேன். 13 ஆண்டுகால சர்வதேச வாழ்க்கையை அனுபவித்த வகையில் நான் நம்பமுடியாத அதிர்ஷ்டசாலி." எனக் கூறி இருக்கிறார் மெக் லானிங்.

ஓய்வு பெறுவதற்கான முடிவை எடுத்த பிறகு அவர் தனது அணியினர் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். லானிங் கடைசியாக பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் ஆடி இருந்தார். 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஆறு மாத இடைவெளி எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் விரைவில் அடுத்த கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தற்போதைய துணை கேப்டனான அலிசா ஹீலி, மகளிர் பிக் பாஷ் லீகின் போது நாய் கடித்த காயத்தால் சிகிச்சை பெற்று வருகிறார். அதனால், வேறு ஒருவரை கேப்டனாக்க ஆஸ்திரேலியா கிரிக்கெட் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Story first published: Thursday, November 9, 2023, 10:08 [IST]
Other articles published on Nov 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+