Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொஞ்ச நஞ்சமல்ல.. 18 வருஷம்…!! காத்திருந்து காலி செய்த ஆஸி..!! எப்படி நடந்தது அந்த விஷயம்..!!

Recommended Video

Ashes 2019 Test | Aus win | 251 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸி- வீடியோ

எட்ஜ்பாஸ்ட்ன்: ஆஷஸ் முதல் டெஸ்டில் அசத்தல் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 18 ஆண்டுகால சரித்திரத்தை இதன்மூலம் மாற்றி எழுதியிருக்கிறது.

ஆஷஸ் தொடர் முதல் டெஸ்டில் இங்கிலாந்தை 2வது இன்னிங்சில் 146 ரன்களுக்கு சுருட்டியது ஆஸ்திரேலியா. இதன் மூலம் 251 ரன்கள் வித்தியாசத்தில் மிக பெரிய வெற்றியை பெற்று 1க்கு 0 என்ற கணக்கில் தொடரில் ஜம்மென்று முன்னிலை வகிக்கிறது.

ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் 49 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளையும், கமின்ஸ் 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் கைப்பற்ற இங்கிலாந்து அணி 13/0 என்று தொடங்கி 53வது ஓவரில் 146 ரன்களுக்குச் சுருண்டது. கிறிஸ் வோக்ஸ் மட்டுமே 37 ரன்களை அதிகபட்சமாக எடுத்தார்.

அறியாத வரலாறு

அறியாத வரலாறு

ஆஸி.யின் இந்த வெற்றியின் பின்னே ஒரு வெற்றியும், யாரும் அறியப்படாத ஒரு வரலாறும் இருக்கிறது. போட்டி நடைபெற்ற எட்ஜ்பாஸ்டனில் 2001ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு இப்போது தான் ஆஷஸ் தொடரில் ஜெயம் கிடைத்திருக்கிறது.

லயனின் சுழல்

லயனின் சுழல்

உணவு இடைவேளைக்கு முன் ஜேசன் ராய் (28), ஜோ ரூட் (28), டென்லி (11) ஆகியோரை வீழ்த்தினார் நாதன் லயன். பிறகு ஸ்டோக்ஸ் (6), மொயின் அலி (4), ஸ்டூவர்ட் பிராட் (0) ஆகியோரையும் காலி செய்தார். உணவு இடைவேளைக்கு பிறகு ஜோஸ் பட்லர், கம்மின்ஸ் வீசிய ஷார்ட் பிட்ச் பந்து ஸ்டம்பை தாக்கியது.

கைகொடுக்காத ரிவியூ

கைகொடுக்காத ரிவியூ

பெயர்ஸ்டோவுக்கு கம்மின்ஸ் ஷார்ட் பிட்ச் பந்தை, ஸ்லிப்பில் கிடைத்தது ஒரு அட்டகாசமான கேட்ச். ரிவியூவும் கைகொடுக்காமல் போக 6 ரன்களில் பெவிலியின் திரும்பினார். டெஸ்ட் தொடரில் இந்த விக்கெட் கம்மின்சின் 100வது விக்கெட்.

ஸ்டோக்ஸ் அவுட்

ஸ்டோக்ஸ் அவுட்

அடுத்த ஓவர் முதல் பந்தில் பென் ஸ்டோக்ஸ் 6 ரன்கள் எடுத்த நிலையில் லயன் பந்து ஒன்று ஆஃப் ஸ்டம்ப் லைனில் பிட்ச் ஆகி எட்ஜாக பெய்னிடம் கேட்ச் ஆனது. மொயின் அலி 28 பந்துகளை தடவி, தடவி 4 ரன்களை எடுத்து டாட்டா காட்டினார்.

வோக்ஸ் 37 ரன்கள்

வோக்ஸ் 37 ரன்கள்

மறு முனையில் கிறிஸ் வோக்ஸ் ஓரளவு நம்பிக்கை அளித்தார். ஆனாலும் அவர் எடுத்தது 37 ரன்களே. பிராடும் எட்ஜ் ஆகி வெளியேற லயன் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடைசியில் கிறிஸ் வோக்ஸ் 37 ரன்களில் கமின்சின் ஸ்லோ பவுன்சருக்கு ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார்.

18 ஆண்டுகள்

18 ஆண்டுகள்

கடைசியில் இங்கிலாந்து 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆட்ட நாயகனாக 2 இன்னிங்ஸ்களிலும் சதம் எடுத்த ஸ்டீவ் ஸ்மித் அறிவிக்கப்பட்டார். எட்ஜ் பாஸ்டனில் 2001-க்கு பிறகு ஆஸ்திரேலியா இப்போது தான் வெற்றி பெறுகிறது, கடைசியாக ஆஷஸ் தொடரை வென்றதும் அதே ஆண்டில்தான். எனவே, ஏக குஷியில் இருக்கின்றனர் ஆஸி. அணியினர், ரசிகர்களும் தான்.

Story first published: Tuesday, August 6, 2019, 8:10 [IST]
Other articles published on Aug 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+