Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

AUS vs SL: பொங்கி எழுந்த ஆஸ்திரேலியா.. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி.. இலங்கைக்கு ஹாட்ரிக் தோல்வி!

லக்னோ: உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இலங்கை அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசல் மெண்டிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி முதல் விக்கெட்டுக்கு 125 ரன்கள் சேர்த்தது. ஆனால் மிடில் ஆர்டரில் களமிறங்கிய வீரர்கள் சொதப்பியதால், அந்த அணி 43.3 ஓவர்களுக்கு 209 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

Australia won by 5 wickets against Srilanka at Lucknow in World Cup 2023

கடைசி 52 ரன்களுக்கு இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனால் 210 என்ற எளிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் வார்னர் - மிட்செல் மார்ஷ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. வார்னர் அதிரடியாக தொடங்கிய நிலையில், 11 ரன்கள் எடுத்து மதுஷங்கா பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் அதே ஓவரின் கடைசி பந்தில் டக் அவுட்டாகி ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி 24 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதன்பின்னர் மார்ஷ் - லபுஷேன் கூட்டணி இணைந்து பொறுப்புடன் விளையாடியது. லபுஷேன் ஒரு பக்கம் நிதானமாக ரன்கள் சேர்த்த நிலையில், மறுபக்கம் மிட்செல் மார்ஷ் பவுண்டரிகளாக விளாச தொடங்கினார். அதிரடியாக ஆடிய மிட்செல் மார்ஷ் அரைசதம் கடக்க, 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில், துரதிஷ்டவசமாக ரன் அவுட்டாகி வெளியேறினார். இதன் காரணமாக 81 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடியது. ஆனால் பின்னர் லபுஷேன் - இங்லிஸ் இருவரும் ஆட்டத்தை ஆஸ்திரேலிய பக்கம் திருப்பினர்.

அதேபோல் இலங்கை அணியும் விக்கெட் வீழ்த்தும் வகையில் அட்டாக் செய்யாமல், டிஃபென்சிவாக பந்துவீசியது. இதனை பயன்படுத்தி கொண்டு இங்லிஸ் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். ஆனால் இன்னொரு பக்கம் விக்கெட்டை காப்பாற்றிய லபுஷேன் 40 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த இங்லிஸ் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த மேக்ஸ்வெல் - ஸ்டாய்னிஸ் கூட்டணி அதிரடியாக ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணியின் நெட் ரன் ரேட்டை உயர்த்தும் நோக்கில் மேக்ஸ்வெல் பவுண்டரியும், சிக்சருமாய் விளாசி தள்ளினார்.

இறுதியாக அதிரடி வீரர் ஸ்டாய்னிஸ் சிக்சர் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார். 35.2 ஓவர்களில் இலக்கை எட்டி உலகக்கோப்பை தொடரில் முதல் வெற்றியை ஆஸ்திரேலிய அணி பதிவு செய்தது. சிறப்பாக ஆடிய மேக்ஸ்வெல் 21 பந்துகளில் 31 ரன்களும், ஸ்டாய்னிஸ் 10 பந்தில் 20 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். அதேபோல் உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி ஹாட்ரிக் தோல்வியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, October 16, 2023, 21:50 [IST]
Other articles published on Oct 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+