For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“விடைபெறுகிறேன்”.. ஆஸ்திரேலிய அதிரடி ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் ODIஇல் இருந்து ஓய்வு

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வர உள்ள நிலையில், அதற்காகத்தான் கவனம் செலுத்த உள்ளதாக அவர் அறிவித்திருக்கிறார்.

மேலும், சில சூழ்நிலைகளில் ஆஸ்திரேலிய அணிக்கு உதவ முடியாமல் போனதாகவும், தனது உடல்நிலை சூழ்நிலைக்கு ஏற்ப எப்படி செயல்படுகிறது என்பதை வைத்தும் தான் இந்த ஓய்வு முடிவை எடுத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

Australian all-rounder Glenn Maxwell Retires from ODIs to Focus on T20 World Cup

மேக்ஸ்வெல் 2012 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார். அவரது 13 ஆண்டுகால ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 149 போட்டிகளில் விளையாடி, 3990 ரன்கள் குவித்து, 77 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 2015 மற்றும் 2023 ஒருநாள் உலகக் கோப்பைகளை ஆஸ்திரேலியா வென்றதில் மேக்ஸ்வெல் முக்கிய பங்கு வகித்தார்.

ஒருநாள் போட்டிகளில் 126 என்ற ஸ்ட்ரைக் ரேட் உடன் இருக்கும் மேக்ஸ்வெல், இந்த வடிவத்தில் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
சமீபகாலமாக, பல காயங்களால் அவதிப்பட்டு வந்த மேக்ஸ்வெல், உடல் ரீதியான சவால்கள் ஒருநாள் போட்டிகளின் முழு 50 ஓவர்களையும் விளையாடுவதற்கு கடினமாக இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் கவனம் செலுத்துவதற்காகவே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது ஓய்வு முடிவு குறித்து கிளென் மேக்ஸ்வெல் பேசுகையில், "ஆரம்பத்தில் நான் எதிர்பாராத விதமாக, முன்னதாகவே ஆஸ்திரேலிய அணியில் தேர்வு செய்யப்பட்டேன் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவுக்காக சில போட்டிகளில் விளையாடியதே எனக்குப் பெருமையாக இருந்தது. அத்துடன் முடிந்துவிடும் என்று நினைத்தேன்."

"அதன் பிறகு, அணியிலிருந்து நீக்கப்படுவது, மீண்டும் அழைக்கப்படுவது, சில உலகக் கோப்பைகளில் விளையாடுவது மற்றும் சில சிறந்த அணிகளின் ஒரு பகுதியாக இருப்பது என பல ஏற்றத் தாழ்வுகளைக் கடந்து வந்தேன்."

மேக்ஸ்வெல் மேலும் கூறுகையில், காலில் ஏற்பட்ட ஒரு காயம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையையே பாதித்ததாகவும், ஒருநாள் போட்டி கிரிக்கெட்டின் உடல்ரீதியான சவால்கள், அவரது சிறந்த பீல்டிங் திறனை பாதிக்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். அடுத்த ஒருநாள் போட்டி உலகக் கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், 2025 சாம்பியன்ஸ் டிராபியின் போது இதை உணர்ந்ததாகக் கூறினார்.

"எனது உடல்நிலை கள நிலவரங்களுக்கு எப்படி பிரதிபலிக்கிறது என்பதை வைத்து பார்க்கும் போது அணியை நான் சற்றே ஏமாற்றுவதாக உணர்ந்தேன். தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லியுடன் நான் இது குறித்து பேசினேன், மேலும் எதிர்காலத்தில் அணியில் எனது இடம் குறித்து அவரது எண்ணங்கள் என்ன என்று நான் அவரிடம் கேட்டேன்,"

"நாங்கள் 2027 உலகக் கோப்பை பற்றி பேசினோம், நான் அவரிடம் 'நான் அதுவரை விளையாடுவேன் என நினைக்கவில்லை. எனது இடத்தில் வேறு வீரர்களை ஆட வைத்து, அந்த இடத்தை அவர்கள் சொந்தமாக்கிக் கொள்ள திட்டமிட வேண்டிய நேரம் இது' என்று கூறினேன். அந்தப் பங்கைத் தக்க வைத்துக் கொள்ள அவர்களுக்கு போதுமான வழி கிடைக்கும் என்று நம்புகிறேன்."

"நான் இன்னும் விளையாடுவதற்கு போதுமானவர் என்று உணர்ந்தால் எனது நிலையை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று எப்போதும் கூறி இருக்கிறேன். சில தொடர்களுக்கு மட்டும் பிடிவாதமாக இருப்பதிலும், சுயநல காரணங்களுக்காக விளையாடுவதிலும் எனக்கு விருப்பமில்லை." என்றார் கிளென் மேக்ஸ்வெல்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் கிரீன்பெர்க் கூறுகையில்: "ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மிக அற்புதமான மற்றும் செல்வாக்கு மிக்க ஒருநாள் சர்வதேச வாழ்க்கையை கொண்ட கிளென்னுக்கு வாழ்த்துக்கள்."

"கிளென்னின் அனல் பறக்கும் பேட்டிங் கிரிக்கெட் உலகை ஒளிரச் செய்ததுடன், 2023 உலகக் கோப்பை வெற்றியிலும் அவரது வீரம் மிக்க பங்களிப்பு உட்பட, ஆஸ்திரேலியாவின் 50 ஓவர் போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றிக்கு ஒரு மூலக்கல்லாக இருந்துள்ளது."

"விளையாட்டின் மற்ற ஜாம்பவான்களைப் போலவே, கிளென் பேட் செய்வதைப் பார்க்கவே ரசிகர்கள் மைதானங்களுக்கு படையெடுத்துள்ளனர், மேலும் அவரது அற்புதமான ஷாட்களைப் பார்த்த குழந்தைகள் பேட் எடுக்க உத்வேகம் பெற்றுள்ளனர்."

"கிளென்னின் ஒருநாள் சாதனைகளுக்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அவருக்கு கடன்பட்டுள்ளது, மேலும் அடுத்த ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கான எங்கள் தேடலில் அவர் இப்போது கவனம் செலுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்."

ஆஸ்திரேலிய ஆடவர் அணியின் தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி கூறுகையில்: "கிளென் ஒருநாள் போட்டியின் மிக ஆற்றல் மிக்க வீரர்களில் ஒருவராக அறியப்படுவார், அவர் இரண்டு ஒருநாள் உலகக் கோப்பை வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார்."

"அவரது இயல்பான திறமை மற்றும் திறமை குறிப்பிடத்தக்கது. களத்தில் அவரது ஆற்றல், பந்துவீச்சில் அவரது குறைத்து மதிப்பிடப்பட்ட திறன் மற்றும் அவரது நீண்டகால நிலைத்தன்மை ஆகியவை அருமையாக இருந்தன. ஆஸ்திரேலியாவுக்காக விளையாடுவதில் அவரது ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு தனித்து நிற்கிறது."

"நல்ல வேளையாக, டி20 வடிவில் ஆஸ்திரேலியாவுக்கு அவர் இன்னும் நிறைய வழங்க இருக்கிறார். எல்லாம் சரியாக நடந்தால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உலகக் கோப்பையை நோக்கி நாம் செல்லும் இந்த அடுத்த 12 மாதங்களில் அவர் முக்கிய பங்கு வகிப்பார்." என்றார் பெய்லி.

Story first published: Monday, June 2, 2025, 12:00 [IST]
Other articles published on Jun 2, 2025
English summary
Australian all-rounder Glenn Maxwell Retires from ODIs to Focus on T20 World Cup
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+