Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“முடிஞ்சா சாய்த்துப்பார்”.. பார்டர் கவாஸ்கர் தொடர்.. அஸ்வினுக்கு ஆஸ்திரேலியா வீரர் ஓபன் சவால்!

சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் வரவுள்ள சூழலில் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு முடிந்தால் சாய்த்துப்பார் எனும் வகையில் மார்னஸ் லாபஸ்சாக்னே சவால் விடுத்துள்ளார்.

இந்திய அணி தற்போது இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதனை தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.

ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு முழுவதும் நியூசி, தொடருக்கு அடுத்ததாக வரவுள்ள பார்டர் கவாஸ்கர் கோப்பை மீது தான் உள்ளது. இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2வது சீசன் இறுதிகட்டத்தை எட்டி வருகிறது. இதில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் அல்லது சமனிலாவது முடிக்க வேண்டும். கடந்த 2012ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா சொந்த மண்ணில் இதுவரை ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்றது கிடையாது. 2017க்கு பிறகு ஒரு போட்டியில் கூட தோற்றது கிடையாது. இதனால் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்.

இருவர் காரணம்

இருவர் காரணம்

இந்திய அணியின் இந்த வெற்றி பயணத்திற்கு முக்கிய காரணம் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா எனும் 2 சுழற்பந்துவீச்சாளர்களின் செயல்பாடுகள் தான். உலகில் எப்படிபட்ட வீரராக இருந்தாலும் இவர்களின் சுழலில் இருந்து தப்பிக்கவே முடியாது என்பது போல உள்ளது. ஆனால் இந்த முறை அஸ்வினை வென்றுக்காட்டுவதாக ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபஸ்சாக்னே கூறியுள்ளார்.

மாற்றம் செய்துள்ளேன்

மாற்றம் செய்துள்ளேன்

இதுகுறித்து பேசிய அவர், கடந்த டெஸ்ட் தொடரில் இருந்தே நான் அஸ்வின் குறித்து யோசிக்க தொடங்கிவிட்டேன். அஸ்வின் எப்படி பந்துவீசுவார் என கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் எனக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் பந்துவீசியதும் சிரமமாக இருக்கும். எனவே இந்த முறை எனது ஆட்டத்தில் நிறைய மாற்றங்களை செய்திருக்கிறேன். அஸ்வினின் ஐடியாக்களை முறியடிக்க நிறைய யுக்திகளை கையில் வைத்துள்ளேன்.

 10 டெஸ்ட் போட்டிகள்

10 டெஸ்ட் போட்டிகள்

ஒரு செஸ் போட்டியை விளையாட எப்படி செல்வோமோ, அது போன்று தான் எனக்கு தற்போது உள்ளது. எப்போது விளையாடுவேன் என எதிர்நோக்கி காத்துள்ளேன். ஆஸ்திரேலிய அணி அடுத்ததாக இந்தியா, இங்கிலாந்து என மொத்தமாக 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளேன். இந்தியாவின் ஸ்பின் அட்டாக் மற்றும் இங்கிலாந்தின் அதிரடி வியூகத்தை அடித்து நொறுக்குவேன் என கூறியுள்ளார்.

Story first published: Saturday, January 14, 2023, 19:27 [IST]
Other articles published on Jan 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+