Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி.வுக்கு வந்த புது தலைவலி.. காயத்தில் ஸ்மித், ஸ்டார்க், கம்மின்ஸ்.. இப்போ மேக்ஸ்வெல்லால் சிக்கல்!

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகியோரை தொடர்ந்து மேக்ஸ்வெல்லும் காயமடைந்துள்ளது அந்த அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ஐசிசி உலகக்கோப்பைத் தொடருக்கு இன்னும் 38 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸை ஓய்வில் இருந்து மீட்டுக் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், அடுத்தடுத்து ஒருநாள் உலகக்கோப்பையை தக்க வைப்பதற்கான திட்டங்களையும் செயல்படுத்த தொடங்கியுள்ளது.

Australian batter Glenn Maxwell Ruled out from SA Tour due to Ankle Injury

இந்தப் பக்கம் இந்திய அணி ஆசியக் கோப்பைத் தொடர், பயிற்சி முகாம் என்று தயாரிப்பு பணிகளை தொடங்கிவிட்டது. ஆசியக் கோப்பைத் தொடரிலேயே இந்திய அணியின் பிரச்சனைகளை கண்டறிந்து அதற்கேற்ப சில மாற்றங்களை மட்டும் உலகக்கோப்பையில் செய்யும் வகையில் திட்டங்களை சரியாக தீட்டிவிட்டது. சாதாரண அணிகளே இப்படியென்றால் 5 முறை உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா எப்படியெல்லாம் திட்டமிடும் என்று ரசிகர்கள் கருத்திட்டு வருகின்றனர்.

ஏனென்றால் ஐசிசி தொடர்கள் என்றாலே ஆஸ்திரேலியா அணி பீஸ்ட் மோடில் விளையாடும். அதற்கேற்ப உலகக்கோப்பைத் தொடருக்கு முன் தென்னாப்பிரிக்கா, இந்தியா அணிகளுடன் மோதவுள்ளது. அதில் தென்னாப்பிரிக்கா அணியுடன் 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி விளையாடவுள்ளது. இதற்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அந்த அணியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் காயம் காரணமாக விலகினார்கள். தற்போது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அதிரடி அனுபவ வீரரான கிளென் மேக்ஸ்வெல் விலகியுள்ளார். இப்படி நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து காயமடைவது ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்தை முடிவு எடுக்கவிடாமல் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோருக்கான பேட்டிங் வரிசையில் ஆஸ்திரேலிய அணி குழப்பமடைந்திருந்த நிலையில், போதுமான பயிற்சி இல்லாமல் நேரடியாக உலகக்கோப்பைத் தொடரில் களமிறங்கவுள்ளது அந்நாட்டு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Monday, August 28, 2023, 15:56 [IST]
Other articles published on Aug 28, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+