For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

துண்டு ஒருமுறை தான் தவறும்.. 32வது சதத்தை விளாசிய ஸ்டீவ் ஸ்மித்.. லார்ட்ஸ் மைதானத்தில் சோலோ சம்பவம்!

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் சதம் விளாசி அசத்தியுள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 32வது சதத்தை ஸ்டீவ் ஸ்மித் எட்டியுள்ளார்.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் தொடக்கத்திலேயே ஸ்டீவ் ஸ்மித் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஏனென்றால் கடந்த முறை ஸ்டீவ் ஸ்மித் இங்கிலாந்து வந்த போது தனியாளாக ஆஸி. அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். இந்த நிலையில் ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் 16 மற்றும் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை இங்கிலாந்து ரசிகர்கள் மைதானத்திலேயே பாட்டு பாடி கொண்டாடினர்.

Australian batter Steve Smith scored his 32nd Century in Test Cricket against England at Lords Stadium

இந்த நிலையில் ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸி. அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ரன்கள் சேர்த்தது. அதில் ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதனால் சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் இங்கிலாந்து அணி புதிய பந்தில் வீசவுள்ளதால், ஆஸி. ரசிகர்கள் பீதியிலேயே ஆட்டத்தை கவனித்தனர். அதற்கேற்ப அலெக்ஸ் கேரி 22 ரன்களிலும், ஸ்டார்க் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இந்த நிலையில் ஒரு பக்கம் கம்மின்ஸை நிறுத்தி வைத்து ஆட்டத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் ஸ்டீவ் ஸ்மித் எடுத்துக் கொண்டார். அவரின் பேட்டில் இருந்து பவுண்டரிகள் அடிக்கப்பட்டு கொண்டே இருந்தது. இவரை சதம் அடிக்க விடக் கூடாது என்பதற்காக இங்கிலாந்து அணியின் அனுபவம் வாய்ந்த ஆண்டர்சன் மற்றும் பிராட் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டனர். ஆனால் எதை பற்றியும் கவலைப்படாத ஸ்டீவ் ஸ்மித், பவுண்டரியை விளாசி தனது 32வது சதத்தை விளாசினார்.

இங்கிலாந்து மண்ணில் ஸ்டீவ் ஸ்மித் விளாசும் 8வது சதம் இதுவாகும். அதுமட்டுமல்லாமல் குறைந்த இன்னிங்ஸ்களில் 32 சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையையும் ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார். இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டீவ் ஸ்மித், 174 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்துள்ளார். இவருக்கு பின் சச்சின் டெண்டுல்கர், மேத்யூ ஹெய்டன், ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோர் இருக்கின்றார்கள். அதேபோல் விராட் கோலி 185 இன்னிங்ஸ்களில் விளையாடி 28 சதங்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, June 29, 2023, 16:56 [IST]
Other articles published on Jun 29, 2023
English summary
The Ashes 2023: Australian batter Steve Smith Scored his 32nd Century in Test Cricket. Also His 8th Century in England Soil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+