Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதுகு வலியால் துடித்த ஆஸி. வீரர்.. இருந்தும் நாட்டுக்காக பந்துவீசி கலக்கிய ஆடம் சாம்பா

லக்னோ : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் சுழற்பந்து வீச்சும் பேட்டிங்கும் எடுபடாமல் போனதுதான்.

ஆஸ்திரேலிய அணி சுழற் பந்துவீச்சாளர் ஜாம்பாவை நம்பி தான் இந்தியாவுக்கு வந்திருந்தது. ஆனால் சாம்பா கடந்த சில மாதங்களாக தன்னுடைய வழக்கமான பந்துவீச்சை வெளிப்படுத்த முடியாமல் திணறினார்.

Australian bowler picks 4 wickets despite suffering from back spasm

இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் அடம் சாம்பா பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நிலை இருந்தது. ஆனால் அவருக்கு இரண்டு நாட்களாக முதுகு வலி ஏற்பட்டு மிகவும் சிரமத்துக்கு உள்ளானார். எனினும் அணிக்காக இன்றைய ஆட்டத்தில் களமிறங்கி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்த நிலையில் ஆட்ட நாயகன் விருதை வென்ற ஆடம் சாம்பார் கூறியதை தற்போது பார்க்கலாம்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் உடலளவில் 100% சரியாக இல்லை. கடந்த இரண்டு நாட்களாக எனக்கு முதுகு வலி ஏற்பட்டிருக்கிறது. முதுகு வலியால் எப்படி பந்து வீசுவது என நான் யோசித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் இன்று தான் நான் சிறப்பாக பந்து வீசினேன். இலங்கை அணியின் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு நான்தான் பந்து வீசவேண்டும் என்று என்னுடைய கேப்டன் முடிவெடுத்தார்.

அதற்கு இன்று நல்ல பலனும் கிடைத்தது. இன்னும் சொல்லப்போனால் கடந்த போட்டியில் நான் சரியாகவே பந்துவீசவில்லை. அதுதான் உண்மை. ஆனால் இன்று நான் நல்ல முறையில் பந்து வீசி விக்கெட்டை எடுத்திருப்பது மனதுக்கு திருப்தியாக இருக்கிறது. மீண்டும் சொல்கிறேன் நான் நன்றாக பந்து வீசுகிறேன் என்ற உணர்வு எனக்கு இன்னும் வரவில்லை.

ஆனால் நான் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டு வருகிறேன். விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடர்ந்து பந்து வீசுகிறேன் அடுத்ததாக எங்களுக்கு மிகப்பெரிய ஆட்டம் பெங்களூருவில் காத்துக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானை அந்தப் போட்டியில் எதிர்கொள்ள போகிறோம். நிச்சயம் அது எங்களுக்கு கடினமான ஆட்டமாக தான் இருக்கும் என்று ஆடம் சாம்பா கூறினார்.

Story first published: Monday, October 16, 2023, 23:41 [IST]
Other articles published on Oct 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+