Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது 10வது முறை.. மீண்டும் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்த ஜோ ரூட்.. ஆர்ப்பரிக்கும் ஆஸ்திரேலிய ரசிகர்கள்

லீட்ஸ்: இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் 10வது முறையாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் வேகத்தில் வீழ்ந்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டில் பேட்ஸ்மேனுக்கும் பந்துவீச்சாளர்களுக்கும் இடையிலான ஆட்டம் சுவாரஸ்யமானது. எப்படி வார்னர் - பிராட் இடையிலான மறைமுக போட்டி ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைகிறதோ, அதேபோல் ரூட் - கம்மின்ஸ் இடையிலான போட்டியும் தரமான சம்பவமாக இருக்கும். ஏனென்றால் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் முக்கியமானவராக இருக்கும் ரூட், ஆஸ்திரேலிய் அணியின் கேப்டன் கம்மின்ஸிடம் மட்டும் தொடர்ந்து ஆட்டமிழந்து வருகிறார்.

Australian Captain Pat Cummins has dismissed Joe Root ten times in Tests Cricket

இதுவரை 9 முறை ஜோ ரூட் பேட் கம்மின்ஸ் வேகத்தில் வீழ்ந்திருக்கிறார். இதனால் ஆஷஸ் தொடரின் 2ஆம் நாள் முதல் செஷன் ஆட்டம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணி 68 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த சூழலில், இன்னொரு விக்கெட் வீழ்ந்தால் ஆஸ்திரேலிய அணியின் கைகள் ஓங்கும். இதனால் கம்மின்ஸை எப்படி ரூட் சமாளிக்கப் போகிறார் என்று ஆவல் இருந்தது.

இந்த நிலையில் ரூட் விக்கெட்டை வீழ்த்துவதற்காகவே 2ஆம் நாளின் முதல் ஓவரை கம்மின்ஸ் வீசினார். முதல் பந்தை சமாளித்த ஜோ ரூட், இரண்டாவது பந்திலேயே ஸ்லிப் திசையில் நின்றிருந்த வார்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணியின் சிறந்த பேட்ஸ்மேனான ரூட் வெறும் 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியது ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. இதன் மூலம் 10வது முறையாக ஜோ ரூட் விக்கெட்டை கம்மின்ஸ் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் ஜோ ரூட்டிற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை பேட் கம்மின்ஸ் 472 பந்துகளை வீசி 226 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். அதேபோல் 10 முறை ஜோ ரூட் விக்கெட்டை சாய்த்து கம்மின்ஸ் அசத்தியுள்ளார். கம்மின்ஸ் பந்துவீச்சில் ஜோ ரூட் சராசரி வெறும் 22.60ஆக மட்டுமே உள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இவர்கள் இருவருக்கும் இடையிலான போட்டியில் கம்மின்ஸ் முன்னணியில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Friday, July 7, 2023, 17:20 [IST]
Other articles published on Jul 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+