Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகின் பெஸ்ட் அணியாக ஆஸ்திரேலியாவை மாற்றுவோம்: கிளார்க்கின் 'ஆஷஸ்' சபதம்

லண்டன்: உலகின் தலைசிறந்த கிரிக்கெட் அணியாக ஆஸ்திரேலியா மாற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு என்று அந்த அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்தார். ஆஷஸ் தொடர் தொடங்கியுள்ள நிலையில், முன்னதாக நிருபர்களுக்கு கிளார்க் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார். இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

ஆஷஸ் தொடர்

ஆஷஸ் தொடர்

வரலாற்று சிறப்புகள் மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர், நேற்று தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் பலப் பரிட்சை நடத்துகின்றன. கடந்த முறை ஆஸ்திரேலியாவில் போட்டித்தொடர் நடைபெற்ற நிலையில், இம்முறை, இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது.

கிளார்க் பேட்டி

கிளார்க் பேட்டி

போட்டிக்கு முன்பாக, நிருபர்களிடம் ஆஸி. கேப்டன் கிளார்க் பேட்டியளித்தார். அப்போது, தனது அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்தும் எதிர்கால திட்டம் குறித்தும் மனம் திறந்தார் கிளார்க். உலக சாம்பியனான ஆஸ்திரேலியா, டெஸ்ட் போட்டி ரேங்கிங்கில் 2வது இடத்திலுள்ளது. இந்த நிலையில், அணியை மேலும் பலமானதாக மாற்றப்போவதாக பேட்டியின்போது கூறினார் கிளார்க்.

கஷ்டமானது

கஷ்டமானது

கிளார்க் கூறியதாவது: ஆஷஸ் தொடர் மிக கஷ்டமானதாக இருக்கும். 2001ல் நடந்ததை போல இங்கிலாந்தை அதன் மண்ணில் எளிதில் ஜெயிக்க முடியும் என நினைக்கவில்லை. இங்கிலாந்து தற்போது மிகவும் வலிமையான டெஸ்ட் அணி என்பதை மறைக்க முடியாது.

சிறந்த அணி

சிறந்த அணி

ஆனால், ஆஸ்திரேலிய அணியின் இலக்கு, எங்கள் அணியை பெஸ்ட் டீமாக மாற்ற வேண்டும் என்பதுதான்.

சிறந்த எதிராளிகளுடன் சிறப்பாக ஆடி திறமையை காட்ட வேண்டும். ஆஸ்திரேலிய மண்ணில் எங்கள் அணி பலமானது. அதேபோல வெளிநாடுகளில் சிறப்பான ஆட்டத்தை காட்ட வேண்டும்.

வெளிநாடுகள்

வெளிநாடுகள்

வெளிநாட்டு தொடர்களில், தொடர்ச்சியாக ஆஸ்திரேலியா சிறப்பாக ஆடுவதில்லை என்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு ஆட்டம் இருக்க வேண்டும். எங்கள் சிறந்த ஆட்டத்தை இங்கிலாந்திலும் தொடர வேண்டும் என்பதில் உறுதி பூண்டுள்ளோம். இவ்வாறு மைக்கேல் கிளார்க் தெரிவித்தார்.

Story first published: Thursday, July 9, 2015, 9:11 [IST]
Other articles published on Jul 9, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+