For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதிர்ச்சி.. ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் விபத்தில் பலி!

சிட்னி: ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் பலியானார்.

Recommended Video

ஆஸி. Ex.கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மரணம்: கார் விபத்தில் பலியான சோகம்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகில் ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் என்று புகழப்பட்டவர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ். சமீபத்தில்தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷென் வார்னே மாரடைப்பு காரணமாக பலியானார். இப்போது இன்னொரு ஆஸ்திரேலிய வீரர் பலியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Australian cricket ex player Andrew Symonds dies in a road crash early today

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மரணம் கிரிக்கெட் உலகை உலுக்கி உள்ளது. இவருக்கு வெறும் 46 வயதே ஆகிறது. உலகம் முழுக்க இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் இவரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பலர் இவரின் மரணத்திற்காக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டவுன்ஸ்வில் என்ற நகரத்தில் காரில் செல்லும் போது ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் விபத்தில் சிக்கினார். கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைக்கு வெளியே சென்று விபத்துக்கு உள்ளானது.

பேட்டிங் ஆல் ரவுண்டரான இவர் 26 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கிறார். அதேபோல் 198 ஒருநாள் போட்டிகளில் ஆடி உள்ளார்.

இரண்டு முறை ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பை வெல்ல இவர் காரணமாக இருந்தார். அதேபோல் 2006ல் ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்கு எதிராக ஆஷஸ் வெல்லவும் இவர் காரணமாக இருந்தார்.

இவர் ஆஸ்திரேலியாவின் பிரிம்ஹாம் பகுதியில் பிறந்தார். அதேபோல் யு.கே உள்ள கென்ட் உள்ளிட்ட பல நகரங்களில் கவுண்டி கிரிக்கெட் ஆடி இருக்கிறார். கவுண்டி கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸ் (16 சிக்ஸ்) அடித்தவர் என்ற சாதனை இவர் வசம் உள்ளது.

கார் விபத்தில் இவர் பலியானது கிரிக்கெட் உலகை உலுக்கி உள்ளது. ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பொதுவாக குடி பழக்கம் அதிகம் கொண்டவர். இதனால் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினாரா என்ற சோதனை செய்யப்பட்டு வருகிறது.

Story first published: Sunday, May 15, 2022, 7:48 [IST]
Other articles published on May 15, 2022
English summary
Australian cricket ex player Andrew Symonds dies in a road crash early today.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+