Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தமிழ் பெண்ணை மணக்கும் க்ளென் மேக்ஸ்வெல்.. எப்போது திருமணம் தெரியுமா?.. இணையத்தை கலக்கும் பத்திரிக்கை

மெல்பேர்ன்: ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் தமிழகத்தை சேர்ந்த பெண்ணை கரம்பிடிக்கவுள்ளார்.

ஐபிஎல் தொடர் மூலம் இந்தியாவில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் க்ளென் மேக்ஸ்வெல்.

கடந்தாண்டு ஆர்சிபி அணிக்காக சிறப்பாக விளையாடியதால், அந்த அணி இந்தாண்டு மெகா ஏலத்திற்காக தக்கவைத்துக் கொண்டது.

மேக்ஸ்வெல் திருமணம்

மேக்ஸ்வெல் திருமணம்

நேற்று மெகா ஏலம் குறித்தும், வீரர்கள் தேர்வு குறித்தும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் மேக்ஸ்வெல் திடீரென நேற்று ஒரு நற்செய்தியை வெளியிட்டுள்ளார். அதாவது தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவரை அவர் மணக்கவுள்ளார். அதற்கான பத்திரிகையும் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக பெண்

தமிழக பெண்

ஆஸ்திரேலியாவில் வளர்ந்த தமிழகத்துப் பெண்ணான வினி ராமன் தான் அவர். அங்கு பார்மஸி பட்டப்படிப்பை முடித்துள்ளார். வினி ராமனும் மேக்ஸ்வெல்லும் நீண்ட வருடங்களாக காதலித்த வந்த சூழலில் கடந்த 2020ம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டனர்.

திருமணம் எப்போது

திருமணம் எப்போது

திருமணமும் அப்போதே நடக்கவிருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் லாக்டவுன் இருந்ததால், 2 வருடங்கள் கழித்து தற்போது திருமணம் செய்து கொள்ளவுள்ளனர். இவர்களுக்கு வரும் மார்ச் 27ம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் திருமணம் நடைபெறவிருக்கிறது.

தமிழில் பத்திரிகை

தமிழில் பத்திரிகை

இதற்காக இவர்கள் தமிழ் முறைப்படி, தமிழிலேயே பத்திரிகையை அடித்து வெளியிட்டுள்ளனர். அது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இவர்களின் திருமணத்திற்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Story first published: Sunday, February 13, 2022, 9:54 [IST]
Other articles published on Feb 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+