Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

க்ளென் மேக்ஸ்வெல் - வினி ராமன் திருமணம்.. ஏமார்ந்துப்போன ரசிகர்கள்.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

மெல்பேர்ன்: ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் தமிழகத்தை சேர்ந்த வினி ராமன் ஆகியோருக்கு நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது.

ஐபிஎல் தொடர் மூலம் இந்தியாவில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை ஈர்த்து வைத்திருப்பவர் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் க்ளென் மேக்ஸ்வெல்.

கடந்தாண்டு ஆர்சிபி அணிக்காக சிறப்பாக விளையாடியதால், அந்த அணி இந்தாண்டும் அவரை தக்கவைத்துள்ளது.

மேக்ஸ்வெல் திருமணம்

மேக்ஸ்வெல் திருமணம்

ஐபிஎல் தொடர் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் மேக்ஸ்வெல் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், தமிழகத்தை சேர்ந்த வினி ராமன் என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளவுள்ளதாக கூறினார். மேலும் தமிழில் அச்சிடப்பட்ட பத்திரிகையும் வெளியிடப்பட்டது.

திருமணம் எப்போது

திருமணம் எப்போது

கடந்த 2020ம் ஆண்டே நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் லாக்டவுன் இருந்ததால், 2 வருடங்களாக திருமணம் தள்ளிப்போனது. இறுதியில் இந்தாண்டு மார்ச் மாதம் 27ம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் திருமணம் நடைபெறவுள்ளதாக முடிவு செய்யப்பட்டது. ரசிகர்களும் உற்சாமடைந்தனர்.

முன்கூட்டியே திருமணம்

முன்கூட்டியே திருமணம்

இந்நிலையில் அதில் ட்விஸ்ட் கொடுத்துவிட்டார். இவர்கள் இருவருக்கும் நேற்றைய தினமே திருமணம் நடைபெற்றுவிட்டது. இருவரும் திருமண உடையில் முத்தம் கொடுக்கக்கூடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ள வினி ராமன், 18.03.2022 திருமண நாள் என உறுதி செய்துள்ளார். மேக்ஸ்வெல்லும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் திருமண மோதிரம் அணிந்திருப்பதை பகிர்ந்து உறுதி செய்துள்ளார்.

தமிழக பெண்

தமிழக பெண்

ஆஸ்திரேலியாவில் வளர்ந்த தமிழகத்துப் பெண்ணான வினி ராமன், அந்நாட்டில் பார்மஸி பட்டப்படிப்பை முடித்துள்ளார். வினி ராமனும் மேக்ஸ்வெல்லும் நீண்ட வருடங்களாக காதலித்த வந்த சூழலில் கடந்த 2020ம் ஆண்டு முடிவெடுத்து தற்போது ஒன்று சேர்ந்துள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

Story first published: Saturday, March 19, 2022, 13:32 [IST]
Other articles published on Mar 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+