Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மரணம்.. கார் விபத்து நிகழ்ந்தது எப்படி? போலீசார் வெளியிட்ட முக்கிய தகவல்

குயின்ஸ்லாந்து : ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் சைமண்ட்ஸ் திடீர் மரணம், ரசிகர்களுக்கும், முன்னாள் வீரர்களுக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.

Recommended Video

ஆஸி. Ex.கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மரணம்: கார் விபத்தில் பலியான சோகம்!

46 வயதான சைமண்ட்ஸ் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், கிரிக்கெட் உலகத்தையே உலுக்கிய இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து எங்கு நடந்தது

விபத்து எங்கு நடந்தது

சனிக்கிழமை இரவு, ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் டவுன்ஸ்வெயில் நகரத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் காரில் சென்ற போது தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஹார்வே ரேஞ்ச் சாலையில், அலைஸ் ரிவர் பிரிட்ஜ் அருகே சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அந்த சாலை குறுகியதாக இருக்கும். அதனை விரிவுப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.

விபத்து நிகழ்ந்தது எப்படி

விபத்து நிகழ்ந்தது எப்படி

இதனால் கட்டுப்பாட்டை இழந்து கார், சாலையோரத்தில் இருக்கும் பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டுள்ளது. இதில் காரில் சைமண்ட்ஸ் மட்டும் பயணித்துள்ளார். இதில் கூட வேறு யாரும் இல்லை. அந்த பகுதி கொஞ்சம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி. இதனால், உடனடியாக விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்க வாய்ப்பு இல்லை.

சம்பவ இடத்தில் உயிரிழப்பு

சம்பவ இடத்தில் உயிரிழப்பு

எனினும் அந்த வழியாக வந்த வேறு கார் ஒட்டுனர், விபத்து குறித்து தகவல் அளித்துள்ளார். போலீசாரும், மருத்துவ குழுவும் சம்பவ இடத்திற்கு வந்து சைமண்ட்ஸை மீட்ட போது, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. சைமண்ட்ஸுக்கு குடிபழக்கம் அதிகம் உள்ளது. இதனால் கிரிக்கெட் அணியிலிருந்து பலமுறை கழற்றி விடப்பட்டுள்ளார்.

கட்டுப்பாட்டை இழந்த கார்

கட்டுப்பாட்டை இழந்த கார்

இதனால் மது போதையில் காரை ஓட்டி வந்து கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என்று முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றன. கார் விபத்து என்றவுடன், வேறு ஏதாவது கார் மோதி இருக்கும் என்று நினைக்கப்பட்டது, ஆனால் எந்த காரும் மோதாத நிலையில், கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்து சைமண்ட்ஸ் உயிரிழந்து இருக்கிறார்.

Story first published: Sunday, May 15, 2022, 14:02 [IST]
Other articles published on May 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+