For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடுத்த இடி.. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் டேவிட் வார்னர்

சிட்னி : டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் இருந்து ஆஸ்திரேலியா வெளியேறியதை அடுத்து அந்த அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். 37 வயதான டேவிட் வார்னர் அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வார்னர் அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்காக ஜனவரி 11ஆம் தேதி 2009 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டேவிட் வார்னர் டி20 போட்டியில் அறிமுகமானார் அதன் பிறகு 15 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணிக்காக டேவிட் வானர் விளையாடி வருகிறார். 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,786 ரன்களை அடித்திருக்கிறார்.

david warner retirement T20 world cup

இதேபோன்று 161 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 6932 ரன்களும், 110 டி20 போட்டிகளில் விளையாடி 3278 ரன்களை ஆஸ்திரேலியாவுக்காக அடித்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக டேவிட் வார்னர் 49 சதங்களை அடித்திருக்கிறார். ஹைடன், கில்கிறிஸ்ட் போன்ற வரிசையில் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் என்ற பெயரை டேவிட் வார்னர் பெற்றிருக்கிறார்.

டேவிட் வார்னர் கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு உச்சங்களும் சரிவுகளும் இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியதற்கான சர்ச்சையில் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் சிக்கினர். இதனால் இருவருக்கும் ஒரு ஆண்டு வரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்க தடை விதித்தது.

எனினும் அந்த தடையிலிருந்து மீண்டு வந்த டேவிட் வார்னர் மீண்டும் ஆஸ்திரேலியா அணியில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தார். 2015 உலகக்கோப்பை, 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை, 2021 டி20 உலக கோப்பை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் என பல்வேறு சாதனைகளை ஆஸ்திரேலியா அணிக்காக டேவிட் வார்னர் வென்று இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக எந்த ஒரு உள்ளூர் கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாமல் ஆஸ்திரேலியா அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்திருக்கிறார்.

Story first published: Tuesday, June 25, 2024, 14:09 [IST]
Other articles published on Jun 25, 2024
English summary
Australian cricketer David Warner announced retirement from International cricket டேவிட் வார்னர் ஓய்வு பெற்றார்.. டி20 உலக கோப்பையிலிருந்து ஆஸி. வெளியேறியதால் முடிவு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+