டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் வார்னர்.. இது தான் கடைசி தொடர் என அறிவிப்பு.. காரணம் ?
மெல்போர்ன் : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்ற வருவதால் நட்சத்திர வீரர்கள் டி20 போட்டிகள் கவனம் செலுத்தும் விதமாக ஒரு நாள் அல்லது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவது வாடிக்கையாக விட்டது.
பென் ஸ்டோக்ஸ், ஒரு நாள் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் கூறினார்.

டெஸ்ட் கிரிக்கெட்
அடுத்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையும் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரும் நடைபெறுகிறது. இதனால் பல முன்னணி வீரர்கள் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் செய்தியாளரிடம் பேசிய டேவிட் வார்னர், தாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தான் முதலில் விலக உள்ளதாக கூறினார்.

ஆஷஸ் தொடர்
இதுகுறித்து பேசியவர் , t20 உலக கோப்பை 2024 ஆம் ஆண்டு நடைபெறுகிறது , அடுத்த ஆண்டு 50 ஓவர் உலககோப்பையும் நடக்கிறது. எனவே அதில் நான் கவனம் செலுத்த இந்த கடினமான முடிவை நான் எடுக்க போகிறேன். இன்னும் சில மாதங்கள் தான் டெஸ்ட் போட்டியில் விளையாடுவேன். அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசஸ் டெஸ்ட் தொடருக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்று விடுவேன்.

எனக்கு வயதாதிவிட்டதா?
எனக்கு இப்போது வெள்ளை நிற பந்து கிரிக்கெட் தான் மிகவும் பிடித்திருக்கிறது. நிச்சயம் நான் 2024 டி20 உலக கோப்பையில் விளையாடுவேன். டி 20 கிரிக்கெட் இல் இருந்து நான் விலக வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். நான் டி20 கிரிக்கெட் விளையாடும் வயதை தாண்டி விட்டேன் என்றும் எனக்கு வயதாகி விட்டது என்றும் பலரும் கூறுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் சொல்லிக் கொள்வது எனது ஆட்டத்தை பொறுத்திருந்து பாருங்கள்.

விருப்பம்
பிக் பேஷ் தொடரில் விளையாடும் போது எனக்கு தெரிந்ததை இளம் வீரர்களுக்கு கற்றுக் கொடுக்க வாய்ப்பாக இருக்கும். பிக் பேஷ் தொடரில் நான் கேப்டனாக செயல்பட்டால் அது அணிக்கு மற்றும் இளம் வீரர்களுக்கும் நன்மையாக இருக்கும் என்று அவர் கூறினார். டி20 உலக கோப்பையில் டேவிட் வார்னர் சரிவர செயல்படவில்லை. சராசரியாகவே 11 ரன்கள் தான் அடித்து இருந்தார். இதனால் வார்னர் டி20யிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என பலரும் கூறிய நிலையில் அவர் டெஸ்ட் போட்டியிலிருந்து தான் நான் விலகப் போகிறேன் என்று கூறிவிட்டார்.

காரணம் என்ன?
அடுத்த ஆண்டு இறுதியில் வார்னருக்கு வயது 36 ஆகிவிடும். வரும் மார்ச் மாதம் இந்தியாவில் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் ஆஷஸ் டெஸ்ட் நடைபெறுகிறது. இது முடிந்தவுடன் ஐம்பது ஒரு உலகக் கோப்பை இந்தியாவில் அக்டோபர் மாதம் தொடங்குகிறது. இதனால் தான் வார்னர் இந்த முடிவை எடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications