Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி. வீரர் மேக்ஸ்வெல் மனைவிக்கு சீமந்தம்.. இந்து முறைப்படி நிகழ்ச்சியை நடத்திய வெளிநாட்டினர்

மும்பை : பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளேன் மேக்ஸ்வெல் தன்னுடைய மனைவிக்கு இந்து முறைப்படி சீமந்தம் நிகழ்ச்சியை செய்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல், கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த வினி இராமன் என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

Australian cricketer Glenn Maxwell and his wife vini raman baby showers function

பெண் வீட்டார் இந்து முறைப்படியும் மாப்பிள்ளை வீட்டார் கிறிஸ்தவ முறைப்படியும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது மேக்ஸ்வெல்லின் மனைவி கர்ப்பமாக உள்ளார். இதனை அடுத்து மேக்ஸ்வெலின் மனைவிக்கு இந்து முறைப்படி சீமந்தம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல வெளிநாட்டவர்கள் கலந்து கொண்டு வினி ராமனுக்கு கன்னத்தில் சந்தனத்தை தடவி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. பலரும் மேக்ஸ்வெல்லின் இந்த செயலுக்கு வாழ்த்து தெரிவித்த வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக விளங்கும் மேக்ஸ்வெல் உலக கோப்பை தொடரில் சில போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

Australian cricketer Glenn Maxwell and his wife vini raman baby showers function

மேக்ஸ்வெல்லின் மனைவிக்கு அக்டோபர் மாதம் தான் குழந்தை பிரசவத்திற்கான தேதி கொடுக்கப்பட்டிருக்கிறது. பொது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் மேக்ஸ்வெல் தன் மனைவிக்காக இந்தத் தொடரில் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. குறிப்பாக இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் அக்டோபர் எட்டாம் தேதி மேக்ஸ்வெல் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது.

Australian cricketer Glenn Maxwell and his wife vini raman baby showers function

எனினும் மேக்ஸ்வெலின் மனைவி பிரசவ சமயத்தில் இந்தியாவில் இருக்க அதிக வாய்ப்பு இருப்பதால் மேக்ஸ்வெல் கிரிக்கெட் போட்டிகளை முடித்துவிட்டு ஓய்வு நாட்களில் தான் மனைவியை சென்று பார்த்து வருவார் என்று கூறப்படுகிறது. தோனி, தன் மனைவியின் பிரசவத்தின் போது அவர் இந்தியா செல்லாமல் உலகக் கோப்பை தொடரில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, July 26, 2023, 16:51 [IST]
Other articles published on Jul 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+