ஆத்தாடி! ஆஸி. அணிக்கு திரும்பிய தமிழக மருமகன்.. இனி தான் கச்சேரியே இருக்கு..பயிற்சியிலே பிண்ணிட்டாரு
ராஜ்காட் : இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் இரண்டு முக்கிய வீரர்கள் திரும்பி இருப்பது அந்த அணியின் பலத்தை பல மடங்கு அதிகரித்து இருக்கிறது.
மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியது.இந்த நிலையில் உலககோப்பை தொடர் நடைபெறும் நிலையில் கடைசி ஆட்டமாக இது கருதப்படுகிறது.

இதனால் இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, குல்தீப் ஆகியோர் திரும்பி இருக்கிறார்கள். இதேபோன்று ஆஸ்திரேலியா அணியில் நட்சத்திர வீரர்கள் ஸ்டார்க் மற்றும் அதிரடி வீரர் மேக்ஸ்வெல் ஆகியோர் திரும்பி இருக்கிறார்கள். இதில் ஸ்டார்க் எப்போதுமே தனது இடது கை வேகப்பந்து வீச்சால் இந்திய அணியின் தொடக்க வீரர்களுக்கு கடும் நெருக்கடியை கொடுப்பார்.
இதனால் நாளைய ஆட்டத்தில் மிச்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் ரோகித் சர்மா எவ்வாறு விளையாடுகிறார் என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

இதேபோன்று மேக்ஸ்வெல் அணிக்கு திரும்பி இருப்பது ஆஸ்திரேலிய அணியின் பலத்தை பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. நடு வரிசையில் விளையாடக்கூடிய மேக்ஸ்வெல் சுழற் பந்துவீச்சை அதிரடியாக ஆடக்கூடியவர். இதுவரை 128 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 3,490 ரகளை குவித்து இருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 124 என்ற அளவில் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக 29 போட்டிகளில் விளையாடி உள்ள மேக்ஸ்வெல் 921 ரன்கள் குவித்து இருக்கிறார்.
இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 137 என்ற அளவில் அதிபயங்கரமாக இருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக மேக்ஸ்வெல் 6 அரைசதம் அடித்திருக்கிறார். குறிப்பாக அஸ்வின் பந்துவீச்சில் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடக்கூடியவர். இதனால் நாளை ஆட்டத்தில் இவர்கள் இருவருக்கும் நடக்கும் போட்டி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்கும். இந்த போட்டிக்கு தயாராகும் வலைப்பயிற்சியில் மேக்ஸ்வெல் அடி பின்னி எடுத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications