"என் ஆடையை கழற்றி, நிர்வாணமாக அடித்தனர்" - ஆஸி. கிரிக்கெட் வீரருக்கு நிகழ்ந்த கொடுமை
சிட்னி: பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் மெக்கைல்க்கு தான் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவத்தை குறித்து பேசியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியில் வார்னே இருந்த காலத்திலேயே, அவருக்கு கடும் போட்டி அளித்தவர் ஸ்டுவர்ட் மெக்கைல்.
1998ஆம் ஆண்டு முதல் 2008ஆம் வரை ஆஸ்திரேலிய அணிக்காக 44 டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஸ்டுவர்ட் மெக்கைல், 208 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

நிர்வாணம்
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஸ்டுவர்ட் மெக்கைல், சிட்னி புறநகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது 2 இளைஞர்கள் வழிமறைத்து மெக்கைலுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மெக்கைலை துப்பாக்கியை காட்டி மிரட்டி காரில் ஏற்றியுள்ளனர். அதனைத் தொடர்ந்து 2 இளைஞர்களும், மெக்கைலின் ஆடையை கழற்றி நிர்வாணப்படுத்தியுள்ளனர்.

தூக்கி வீசினர்
மெக்கைலை ஆடையில்லாமல் போட்டு அடித்து தாக்கிவிட்டு, சுமார் ஒன்றை மணி நேரம் காரில் சுற்றிவிட்டு வேறு ஏதோ இடத்தில் மெக்கைலை தூக்கி வீசியுள்ளனர். இது குறித்து கில்கிறிஸ்ட்டின் போட்காஸ்டில் தமக்கு நேர்ந்த அனுபவங்களை பகிர்ந்த மெக்கைல், தன் வாழ்நாளில் மோசமான ஒன்றரை மணி நேரம் இது தான்.

இளைஞர்கள் மறுப்பு
இந்த சம்பவத்துக்கு பிறகு, என் வாழ்க்கையே மாறிவிட்டது என்று ஸ்டுவர்ட் மெக்கைல் கூறியுள்ளார். இது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மெக்கைல் தான் எங்களிடம் வந்து தவறாக நடந்து கொண்டதாகவும், எங்களிடம் போதை பொருளை விற்றதாகவும் குற்றஞ்சாட்டினர்.

விசாரணை
இந்த நிலையில் தான் மெக்கைல், தமக்கு நேர்ந்த அனுபவம் குறித்து முதல் முறையாக பேசியுள்ளார். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ஸ்டுவர்ட் மெக்கைல் மீது தவறு இல்லை என்று தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும் இது தொடர்பான வழக்கு அடுத்த ஆண்டு நீதிமன்றத்தில் வர உள்ளது. அதன் முடிவில் யார் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications