பாலியல் புகாரில் சிக்கிய டிம் பெயின், கிரிக்கெட்டிலிருந்து விலகல்- ஸ்மித்துக்கு புதிய பதவி
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக டிம் பெயின் கடந்த 2018ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், அடுத்த மாதம் தொடங்க உள்ள பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடருக்காக ஆஸ்திரேலிய அணி தயாராகி வந்தது.
Recommended Video
இந்த நிலையில், டாஸ்மேனியா கிரிக்கெட் சங்கத்தில் பணிபுரிந்த பெண்ணுக்கு டிம் பெயின் படுக்கைக்கு அழைத்து குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் பூகம்பமே வெடித்துள்ளது.

பதவி விலகல்
தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த டிம் பெயின், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். தமது செயலுக்கு ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு குற்றமில்லை என்று டாஸ்மேனியா கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்ததை சுட்டிக்காட்டிய டிம் பெயின், ஆஸ்திரேலிய கேப்டன் இப்படி பட்ட செயலில் ஈடுபட்டு இருக்க கூடாது என்று தெரிவித்திருந்தார்.

ஆதரவு
இந்த நிலையில், கேப்டன் பொறுப்பிலிருந்து டிம் பெயின் விலகியது குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், டிம் பெயின் எடுத்த முடிவு அவரது சொந்த முடிவு என்றும், தொடர்ந்து அவர் அணியில் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்றும் அறிவித்தது. மைக்கேல் கிளார்க் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் டிம் பெயினுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஓய்வு
இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், தாம் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து காலவரையின்றி விலகி கொள்வதாக டிம் பெயின் அறிவித்துள்ளார். தனது மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால், அணியில் தொடர விரும்பவில்லை என்றும், தமக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்றும் டிம் பெயின் கூறியுள்ளார். இது டிம் பெயினின் தன்னிச்சையான முடிவா அல்லது வேறு யாரும் அழுத்தம் தந்தார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

புதிய கேப்டன்
இதனிடையே, ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டனாக வேகப்பந்துவீச்சாளர் டிம் பெயின் நியமிக்கப்பட்டுள்ளார். 1956ஆம் ஆண்டுக்கு பிறகு வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் ஆஸ்திரேலிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி கேப்டன் பதவியை இழந்த ஸ்மித், துணை கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications