Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

13வது முறையாக தலையில் பந்து தாக்கி சுருண்டு விழுந்த ஆஸ்திரேலிய வீரர்.. மருத்துவமனைக்கு விரைவு

Will Pucovski : ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உள்நாட்டு கிரிக்கெட் போட்டி ஒன்றில் வில் புக்கோவ்ஸ்கி என்ற வீரர் தலையில் 11வது முறையாக பந்து தாக்கி அவர் மைதானத்திலே சுருண்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நமது ஊர் ரஞ்சி கிரிக்கெட் போட்டி போல் ஆஸ்திரேலியாவில் ஷெஃபிஃபீல்டு சீல்டு (Sheffield shield) தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதில் விக்டோரியா அணிக்காக வில் புக்கோவ்ஸ்கி என்ற 26 வயதான வீரர் விளையாடினார்.

Australian cricketer Will Pucovski gets hit by ball for 13th time

டாஸ்மானியா அணியின் ரெய்லி மெர்டீத் வீசிய பவுண்சர் ஒன்று அவருடைய தலையை எதிர்பாராத விதமாக தாக்கியது. இதில் அவர் மைதானத்தில் சுருண்டு விழுந்தார். இதனால் மற்ற வீரர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரை சென்று அருகில் பார்த்தனர். இதனை அடுத்து மருத்துவக் குழுவினரை நடுவர்கள் உடனடியாக களத்திற்கு அழைத்தனர்.

அவர்கள் பரிசோதனை செய்ததில் வலியால் அவதிப்பட்டது தெரிய வந்தது. இதனால் அவர் மைதானத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார். வில் புக்கோஸ்விகி இதே போல் அடி வாங்குவது முதல் முறை கிடையாது. தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இவ்வாறு அடிபட்டு களத்தை விட்டு பாதியில் செல்வது 13வது முறையாகும்.

ஏற்கனவே மனதளவில் தாம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறி கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தார் வில் புகோஸ்விகி. இந்தியாவுக்கு எதிராக 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டி ஒன்றிலும் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வில் புக்கோஸ்விகி தலையில் பந்து பட்ட சம்பவம் அனைவருக்கும் பில்ப் ஹூயூக்ஸ் ஏற்பட்ட கதியை நினைவு படுத்தியது.இதேபோன்று ஒரு போட்டியில் தான் பில் ஹியூக்ஸ் தலையில் பந்து பட்டு அவர் மைதானத்தில் சுருண்டு விழுந்தார்.

அங்கே அவர் தன்னுடைய சுயநினைவை இழந்து கோமாவுக்கு சென்ற நிலையில் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய உயிரிழப்புக்கு பிறகுதான் பேட்ஸ்மேனுக்காண ஹெல்மெட்டில் பல மாற்றங்கள் செய்யப்பட்டது. தற்போது வில் புகோஸ்விக்கு இதேபோல் அடிபட்டது ரசிகர்களை ஷாக்காக செய்தது. எனினும் வில், எழுந்து நின்று மைதானத்தை விட்டு நடந்தே சென்றார். தற்போது அவர் மருத்துவ குழுவினரால் சோதிக்கப்பட்டு வருகிறார். அவருக்கு பதிலாக மாற்று வீரர் களம் இறக்கப்பட்டிருக்கிறார்.

Story first published: Sunday, March 3, 2024, 18:38 [IST]
Other articles published on Mar 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+