Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கிரிக்கெட்டை ஆட்சி செய்வதே பிசிசிஐ தான், ஐசிசி கிடையாது.. புயலை கிளப்பிய ஆஸ்திரேலிய வீரர்கள்

மும்பை : இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இருக்கிறார்கள். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்து இருக்கிறது.

இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன இந்த சூழலில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர்கள் அழைத்து பிசிசிஐ மற்றும் ஐசிசி குறித்து என்ன நினைக்கிறீர்கள்.ஒரே வார்த்தையில் பதில் சொல்லுங்கள் என ஆஸ்திரேலியா ஊடகம் ஒன்று கேள்வி கேட்டிருக்கிறது.

ind vs aus travis head border gavaskar trophy india vs australia vs


அதற்கு ஆஸ்திரேலியா வீரர்கள் அளித்த பதில் தான் தற்போது இணையத்தை கலக்குகிறது. இதில் முதலில் பேசிய ஸ்மித், ஐசிசி என்று சொன்னவுடன் பிசிசி அளவுக்கு அவர்கள் சக்தி வாய்ந்தவர்கள் கிடையாது என கூறினார் தவறாக சொல்லி விட்டோம் என்பதை உணர்ந்த ஸ்மித், இல்லை! இல்லை நான் அப்படி சொல்லவில்லை நான் அது காமெடிக்காக சொன்னேன். icc என்றால் லீடர்கள் என்று பதில் அளித்தார்.

பிசிசிஐ குறித்து சக்தி வாய்ந்தது என்று ஸ்மித் ஒற்றை வார்த்தையில் பதில் அளித்திருக்கிறார்.இதனை தொடர்ந்து பேசிய டிராவிஸ் ஹெட் பிசிசிஐ ஆட்சியாளர்கள் என்றும் ஐசிசிஐ இரண்டாவது இடம் என்றும் கூறி இருக்கிறார். மேலும் இந்திய கிரிக்கெட் என்ற வார்த்தைக்கு பலம் வாய்ந்தது என்ற ஒற்றை பதிலை அவர் தெரிவித்திருக்கிறார். இதுதான் தற்போது புயலை கிளப்பி இருக்கிறது.

ஐசிசியை விட பிசிசிஐ பலமானது என்று வங்கதேச மற்றும் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் புலம்புவது உண்டு. ஐசிசி = பிசிசிஐ என்று அவர்கள் அடிக்கடி கமெண்ட் செய்வார்கள். ஆனால் இப்படிப்பட்ட கமெண்டை ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் கூறியிருப்பது தான் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுபோன்று மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி நாதன் லயன் ஆகியோர் icc என்றவுடன் அவர்கள் தான் பாஸ் என்று பதில் அளித்திருக்கிறார். ஐசிசி குறித்து உஸ்மான் கவாஜா பதில் அளிக்க மறுத்தார். இந்திய கிரிக்கெட் குறித்து திறமை வாய்ந்தவர்கள் என ஒற்றை வார்த்தையில் பதில் அளித்திருக்கிறார்.ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ், ஐசிசி,பிசிசிஐ, இந்திய கிரிக்கெட் அணி என மூன்றுக்குமே மிகப்பெரியது என ஒரே வார்த்தையில் ஒரே பதிலை கூறியிருக்கிறார்.

Story first published: Monday, December 23, 2024, 22:13 [IST]
Other articles published on Dec 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+